Home » சேகர்கள் சாகக் கடவர்
இந்தியா

சேகர்கள் சாகக் கடவர்

70 பண்டிதர்கள் கொண்ட குழு இணைந்து இந்துக்களுக்கான நடத்தை விதிகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். மனு ஸ்மிருதி, பராஷர் ஸ்மிருதி, தேவல் ஸ்மிருதி. இதோடு பகவத் கீதை, ராமாயணம். இதிலிருந்து எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பக்கங்களைப் பிய்த்துப் போட்டுக் கலக்கித் தயாராகிறது புது ஸ்மிரிதி. சாம்பிளுக்கு சில விஷயங்கள் மட்டும் தற்போதைக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதிலேயே ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

கோயில்களில் கடவுளை எப்படி வணங்க வேண்டும்? பிறந்த நாள் எப்படிக் கொண்டாட வேண்டும்? மாலையில் கல்யாணம் செய்யலாமா கூடாதா? இறுதிச் சடங்கில் குறைந்தபட்சம் இருக்க வேண்டியவர்கள் எத்தனை பேர்? இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய சடங்குகள் என்னென்ன என்று பட்டியல் கொடுக்கப் போகிறார்களாம்.

வாரணாசியின் பழமையான வித்வ பரிஷத் அமைப்பின் சார்பில் இந்தப் பணி நான்காண்டுகளாக நடந்து வருகிறது. முன்னர் அலகாபாத் என்றழைக்கப்பட்ட பிரயாக்ராஜில் 2025-ஆம் ஆண்டு நடக்கவுள்ள கும்பமேளாவில் இந்த நடத்தை விதிகள் வெளியிடப்பட உள்ளன. 100 கோடி இந்துக்கள் சார்பாக விதிகள் எழுதுவது 70 பேர். சங்கராச்சாரியார், தர்மாச்சாரியார், மகா மண்டலேஷ்வரர்களிடம் தெரிவித்து அங்கீகாரம் பெறப்படும். இதில் எங்கும் பெண்கள் இருப்பதாகத் தகவல் இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • நாமெல்லாரும்தான். நான் தலைப்பே வைக்காமல் கட்டுரையை அனுப்பியிருந்தேன். செத்தாண்டா சேகரின் இலக்கிய வடிவமாக இத்தலைப்பை எடிட்டர் வைத்திருக்கிறார்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!