Home » பனையோலைக் கடிகாரம்; பல வடிவ முறம்!
தொழில்

பனையோலைக் கடிகாரம்; பல வடிவ முறம்!

ஆனந்த பெருமாள்

கலித்தொகைப் பாடலில், பெண் ஒருத்தி முறத்தால் புலியை விரட்டிய கதையினைக் குறித்து நாம் படித்திருப்போம். இதிலிருந்து நாம் பெண்களின் வீரம், முறத்தின் உறுதி இரண்டையும் அறிந்து கொள்ளலாம். மூங்கில் பிரம்புகளால் செய்யப்பட்டு வந்த முறங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியமான பொருட்களில் ஒன்று. முறம் இல்லாத வீடு என்பதே ஒரு காலத்தில் இருந்திருக்காது. நெல் தூற்றுவது, அரிசி, சோளம், காணம், கேழ்வரகு போன்றவற்றைப் புடைப்பது உள்பட பல சங்கதிகளுக்குப் பயன்படும் முறம் தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசியப் பொருள்.

அரிசியில் உமி, கல் நீக்குவதற்கு இதைவிட வேறு சிறந்த உபாயம் கிடையாது. முறத்தால் தானியங்களைப் புடைக்கும்போது உண்டாகும் சரக் சரக் சத்தத்தைத் தமிழக கிராமங்களில் இன்றும் கேட்கலாம். முறத்தைப் பயன்படுத்த நல்ல பயிற்சி வேண்டும். முறத்தில் இருக்கும் கல், உமி கலந்த தானியத்தை மெதுவாகத் தட்டி வீசி எழுப்பி அதை மீண்டும் பிடிக்க வேண்டும். தானியத்திற்கும், கலப்புப் பொருளுக்கும் உள்ள எடை வேறுபாட்டால் அவை வேவ்வேறு இடங்களில் விழும். இதைத் தொடர்ந்து செய்யும்பொழுது தானியம் ஒரு புறமாகவும் கலப்பு பொருள் ஒரு புறமாகவும் பிரியும். தட்டித் தூக்குவதும் இசைவாக இடவலமாக அதை அசைப்பதும் ஒரு லயத்துடன் நடைபெற வேண்டும். முறம், அகன்ற வாய் கொண்டதாக இருக்கும். சுளகு, குறுகிய வாய் கொண்டதாக இருக்கும். இன்று முறம், சுளகு போன்ற வார்த்தைகள் கூட அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்ற நிலைதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!