Home » காவிரி: ஒரு தீராத பிரச்னையின் கதை
தமிழ்நாடு

காவிரி: ஒரு தீராத பிரச்னையின் கதை

கடந்தசில வாரங்களாக காவேரிப் பிரச்சனை மீண்டும் முக்கியச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், ராம் நகர் எனக் கர்நாடகத்தின் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இரு மாநில அரசியல்வாதிகளும் அறிக்கை, பேட்டி என்று கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மறுபக்கம் இதற்கெனவே இருக்கும் கன்னட இனவாத அமைப்புகள் வீதிக்கு வந்தார்கள். தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக்கூடாதென அரசுக்கு அழுத்தம் தந்தனர். பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவின. எப்போதும் போலக் கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜும் தவறாமல் களத்தில் இருந்தார். இந்த முறை அவரின் அரசியல் கர்நாடக மக்களிடமே எடுபடவில்லை என்பதைத் தமிழ்நாட்டு இனவாத அரசியல் அமைப்புகளும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. கர்நாடக திரைப்படத் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் தலையிட்டுப் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. காவேரி மேலாண்மை ஆணையக் குழுவின் உத்தரவோ, உச்ச நீதிமன்ற உத்தரவோ, மத்திய அரசின் பரிந்துரையோ… கர்நாடகாவின் எந்த அரசும் இதுவரை இவற்றில் எதையும் மதித்ததில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!