Home » சாலையைப் பார்த்துக் காரை ஓட்டவும்
நுட்பம்

சாலையைப் பார்த்துக் காரை ஓட்டவும்

கடைக்குபபோனோம், இருப்பதைப் பார்த்து நமக்குப் பிடித்ததைத் தேர்வு செய்து வாங்கி, வீட்டுக்குக் கொண்டு வந்து சிலகாலம் கழித்துப் பிடிக்கவில்லை என்றால் உடனே விற்றுவிட்டு வேறு பொருள் வாங்கும் மாதிரி இல்லை கார். காரை இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செல்பேசியை மாற்றுவது போல மாற்றுவதும் இல்லை. தினம் தினம் நம்மைப் பாதுகாப்பாக வீட்டுக்குக் கொண்டுவிட்டு, வாங்கி பல ஆண்டுகள் நம்மோடு இருக்கும் பொருள் அது. அப்படியான வண்டியைத் தேர்வு செய்யும் போது, இப்போதெல்லாம் முக்கியமாகப் பார்க்கப்படுவது அதிலிருக்கும் பொழுதுபோக்கு கருவியின் திறனை. அதில் ஒன்று கூகுள் ஆட்டோ வசதி.

ஆன்ட்ராய்ட் ஆட்டோ

நம் செல்பேசிகளில் இருக்கும் அதே ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தைக் கார்களில் இருக்கும் பொழுதுபோக்குக் கருவியோடு இணைக்கும் வசதியின் பெயர் தான் ஆன்ட்ராய்ட் ஆட்டோ. எதற்காக இது வேண்டும் என்று பிறகு பார்க்கலாம். இது வேலை செய்ய இரண்டு வசதி இருத்தல் வேண்டும் – ஒன்று, உங்கள் காரில் இருக்கும் பொழுதுபோக்குக் கருவியில் ஆன்ட்ராய்ட் ஆட்டோவுக்குக்கான இடைமுகம் இருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் வரும் பெரும்பாலான கார் பொழுதுபோக்கு கருவிகளில் இது இருக்கிறது. இரண்டாவது உங்கள் செல்பேசியில் ஆன்ட்ராய்ட் 10 அல்லது அதற்கு மேலான பதிப்பு இயங்க வேண்டும். இது இரண்டும் இருந்தால், உங்கள் செல்பேசியை, கார் இசை பெட்டியோடு, யு.எஸ்.பி. (USB) கேபிள் மூலம் இணைக்கலாம் – இது போனை சார்ஜ் செய்யப் பயன்படுத்தும் அதே கேபிள் தான். இப்படி இணைப்பதால் உங்கள் செல்பேசியில் இருக்கும் ஆன்ட்ராய்ட் திரையே உங்கள் வாகனத்தில் இருக்கும் பொழுதுபோக்குக் கருவியின் தொடுதிரையில் வந்துவிடும். இதனால் உங்களுக்கு தெரிந்த கூகுள் மாப்ஸ், ஸ்போடிபை (Spotify), அமேசான் மியூசிக் போன்ற செயலிகள் வாகனத்தின் திரையிலும் வேலை செய்யும். வாகனத்தின் இசைக் கருவியில் இருக்கும் மாப்ஸ் செயலிகள் பல நேரம் ஒன்றுக்கும் உதவாத ஒன்று. அதனால் கூகுள் மாப்ஸ் அந்த இடத்தில் வேலை செய்வது வரப் பிரசாதம். அடுத்து, கூகுள் அசிஸ்டண்ட் என்கிற வாய் வார்த்தைகளால் செயலிகளை இயக்கும் வசதியும் வேலை செய்யும். ஆன்ட்ராய்ட் ஆட்டோ வரும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!