Home » போதை புதிது
உலகம்

போதை புதிது

ஜோம்பியாக மாறும் மனிதர்கள்

புதிய போதை மருந்துகளால் அமெரிக்கர்கள் சீரழிவது சரித்திரத்துக்குப் புதிதல்ல. சில காலமாக அது இல்லாதிருந்தது. இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்தப் புதிய மருந்தின் பெயர் ஜைலுஜீன் (xylazine – உச்சரிப்பு முறை:zai·luh·zeen). இந்த மருந்தை டிரான்க், ட்ரான்க் டோப், ஜாம்பி மருந்து, குதிரை மருந்து என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். போதைக்கு அடிமையானவர்களின் உடல் நலத்தைப் பெரிதும் சீரழிக்கிறது. இதை உட்கொண்டால் தோன்றும் அறிகுறிகள் முதலில் தோலில் உண்டாகும் காயங்கள். படிப்படியாக உடல் முழுக்கப் பரவி தோலில் செதில்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட தோல் ரத்தமும் சீழுமாக அழுகி உடலிலிருந்து கொட்ட ஆரம்பிக்கிறது. ஆசிட் ஊற்றினாலோ அல்லது தீப்பற்றி எரிந்தாலோ காயம் எப்படி இருக்குமோ அதுபோல இருக்கிறது. உச்சக்கட்ட பயங்கரம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!