Home » தேர்தல் முடிவுகள் தாமதமாவது ஏன்?
உலகம்

தேர்தல் முடிவுகள் தாமதமாவது ஏன்?

அமெரிக்கத் தேர்தல் ஆணையம், வேட்பாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பது, அவர்கள் பரப்புரைக்கான நிதி திரட்டுவது, அவர்களின் பரப்புரைக் கூட்டங்களுக்கு நிதி அளிப்பது போன்ற செயல்களை மட்டும்தான் செய்யும்.  என்றால், மற்ற தேவைகளைக் கவனிப்பது எது அல்லது யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா..?

வாக்களிக்கும் கருவிகள், அஞ்சலில் வாக்களிக்க வேண்டும் என்றால், தயாராகும் வாக்குச் சீட்டுகள், ஒவ்வொரு தேர்தலிலும் தன்னார்வத்துடன் பணி செய்யும் மக்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் அலுவலக நடைமுறைகளை யார்தான் கண்காணிப்பார்கள்? அதற்காகத்தான் அமெரிக்கத் தேர்தல் உதவி ஆணையம் (US Election assistance commission) உருவாக்கப்பட்டது.

அமெரிக்கத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க உதவுங்கள் என்ற சட்டத்தின்படி, (Help America Vote, 2002) 2002-இல் உதவி ஆணையம் நிறுவப்பட்டது. இது சுயேச்சையான அமெரிக்க மத்திய அரசின் அமைப்பு. இரு கட்சி (bipartisan) ஆதரவுடன், ஓப்புதலுடன் நிறுவப்பட்டது. அமெரிக்க மக்கள் வாக்களிக்க உதவும் சட்டத்தின் விதிமுறைகளை ஒட்டிச் செயல்படும். அதே நேரம் தன்னார்வத்துடன் மின்னணு வாக்களிக்கும் இயந்திரங்களைப் பரிசோதிப்பது, புது இயந்திரங்களுக்கு ஒப்புதல் கொடுப்பது (Voluntary voting system guidelines, VVSG) ஆகியவற்றோடு, தேர்தல் குறித்து வெளியாகும் அனைத்துக் கையேடுகள், தகவல் குறிப்புகளைச் சரிபார்த்து அனுமதிக்கும் கடமையும் கொண்டது (clearing house for all information on election administration) .

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!