Home » உரு – 9
உரு தொடரும்

உரு – 9

முத்து நெடுமாறன்

முரசு கொட்டியது

தொண்ணூறுகளில் கணினித்தமிழ் முயற்சிகள் பல கிளைகளாக விரிந்திருந்தன. தமிழ்நாடு உட்படப் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்களால் பல்வேறுபட்ட நிலையில்- ஆனால் சீராக முன்னேறிக்கொண்டிருந்தன.

விண்டோஸ் கணினிகள் நிறையப் புழக்கத்துக்கு வந்தபிறகு தமிழைக் கணினியில் பயன்படுத்துவது அதிகரித்தது. ஆனால் ஆளுக்கொரு எழுத்துருவைப் பயன்படுத்தினார்கள். அச்சுத்துறையைப் பொறுத்தவரை ஒன்றும் பெரிய சிக்கலில்லை. கணினியில் இருப்பது அச்சில் வரப்போகிறது. ஒருவேளை நம் கணினியில் இருப்பதை வேறொரு கணினியில் படிக்க வேண்டும் என்றால் அந்தக் கோப்பினைக் குறுவட்டில் நகலெடுத்துச் செல்ல வேண்டும். கையோடு எழுத்துருவையும் எடுத்துச் சென்று வேறு கணினியில் நிறுவிக்கொள்வார்கள். அப்போதுதான் தமிழ் எழுத்து அந்தக் கணினியிலும் தெரியும். இல்லையெனில் கட்டம் கட்டமாகத்தான் தெரியும்.

இணையம் வந்த பிறகும் இதைப் போலவே தமிழில் தட்டச்சு செய்த கோப்பினை மின்னஞ்சலில் அனுப்பினால் கூடவே எழுத்துருவையும் இணைத்து அனுப்பினார்கள். இதுபோக உள்ளீட்டு முறையிலும் பல விதங்கள் இருந்தன. தமிழ்நாட்டில் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளச் சொல்லி அப்போது அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த மு.ஆனந்தகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார் 1994-ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் இணையம் பரவலாகத் தொடங்கியது. 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு. ஒரு நிமிடத்துக்குச் சுமார் இருபது ரூபாய் வரை இணையம் பயன்படுத்தச் செலவாகும். ஒரு மின்னஞ்சல் அனுப்பக் குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகும். தமிழ்நாடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முனைப்புக் காட்டும் மாநிலமாக இருந்தாலும் வசதி வாய்ப்புகளைப் பொறுத்தவரை வெளிநாட்டுத் தமிழர்கள் சில அடிகள் முன்னேதான் இருந்தனர். இணையமும் சொந்தக் கணினியும் தமிழ்நாட்டுக்கு முன்பே அவர்களுக்குக் கிடைத்துவிட்டதல்லவா..?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!