Home » உரு – 8
உரு தொடரும்

உரு – 8

மனைவி பவானி-முத்து நெடுமாறன்- மகன் அருள்மொழி, தமிழ் டாட் நெட் நண்பர் மணிவண்ணன்

ஊரு விட்டு ஊரு வந்து

கிள்ளானில் படித்த போதும் விடுமுறை என்றால் முத்துவும் அவருடைய சகோதரர்களும் கேரித் தீவுக்குச் சென்றுவிடுவர். பெரிய வகுப்பில் இருப்பதால் மற்றவர்கள் சென்ற பிறகு ஒருசில நாட்கள் கழித்தே முத்துவுடைய தேர்வு முடிந்து கேரித் தீவு செல்வார். அங்கேயிருக்கும் இவர் பாட்டி, ஓடிக்கொண்டிருக்கும் கோழிகளைக் காட்டி “எல்லு வரட்டும், அந்தக் கோழியைப் பிடித்துச் சமைத்து விடலாம்” என்று காத்திருப்பார்.

முத்தெழிலன் என்ற பெயர் பாட்டியின் பல்லுப்போன வாய்க்குள் நுழைந்து வெளியில் வரும்போது எல்லு என்றாகிவிடும். “அந்தக் கோழி எங்களுக்காக உயிரைக் கொடுக்காதா?” என்று முத்துவின் உடன்பிறந்தோர் வேடிக்கையாகப் பாட்டியிடம் வம்பிழுப்பர். குடும்பப் பெரியவர்களிடம் முத்துவுக்குச் சிறப்பு இடம் இருந்தது போலத்தான் அலுவலகத்திலும். எந்தப் பிரிவில் வேலை செய்பவர்கள் என்றாலும் சந்தேகம் வந்தால் முத்துவைத்தான் தேடுவார்கள். புரியும்படி விளக்கிச் சொல்வதில் முத்துவுக்கு இருந்த திறமையால் அலுவலகத்தில் அவருக்கென்றொரு சிறப்பு அங்கீகாரம் இருந்தது. மார்க்கெட்டிங் மேனேஜராகக் கம்பெனி சார்பாகச் செய்தியாளர்களைச் சந்திப்பது, விளம்பரப்படுத்துவது ஆகியவையும் இவரது பணியே.

இரண்டு விதமான விற்பனைப் பொருள்களை அப்போது தயாரித்தது சன் மைக்ரோ சிஸ்டம்ஸ். பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் கணிதவியல், ஆர்கிடெக்ட் வேலைகளைச் செய்யும் உயர்நுட்பக் கணினிகள் ஒன்று. அறையை நிறைத்து இருக்கும் சர்வர் மெஷின்கள் மற்றொன்று. அரசாங்கம், பாலம் கட்டுவதாக இருந்தாலும் ஐ.டி. பார்க் உருவாக்குவதாக இருந்தாலும் சன் நிறுவனம் தங்கள் சேவையை அளித்தது. “டாட் காம்-ல இருக்குற டாட் நாங்கதான் தெரியுமில்ல” என்று பெருமை பீற்றிக் கொண்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!