அதிகாரமும் ஆணவமும் நிறைந்த ஒருவர், அதிலும் சுற்றி இருந்தவர்களைத் தாழ்த்திப் பேசியே பழகிய ஒருவர் 55 நிமிடங்கள் எதுவும் பேசாமல் இன்னொருவரின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு இருந்ததைப் பார்க்க நிறைய அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு! நாட்டின் முதல் குடிமகனாகவே இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும் முன்னாள் அதிபர் அந்த நேரம் அமெரிக்காவின் பல கோடி குற்றம் சாட்டப்பட்ட மக்களில் ஒருவராகவே நடத்தப்பட்டார் என்பதும் புரிந்திருக்கும். இதுதான் மக்களாட்சியின் வெற்றி!
இதைப் படித்தீர்களா?
32. உயர்ந்தது நான் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக அந்த முனி சொன்னான். தான் கள்ளத்தனமாக என் மனத்துக்குள் புகுந்து அங்கிருப்பதைக் கண்டறிய முயன்றதை...
32. புனிதப் பயணம் 1915 ஃபிப்ரவரி 1ம் தேதி காந்தி அகமதாபாத் வந்தார். இன்றைய குஜராத் மாநிலத்தின் தலைநகரமாகிய இந்த ஊரைத் தன்னுடைய இந்தியப் பணி மையமாக...
பென்ஸ் ஒரு நாள் அதிபராக வைத்து,. அவர் மூலம் பொது மன்னிப்பு வாங்கி இருக்கலாமோ ? நம்ம ஊர் அரசியல்வாதிகள் கிட்ட ‘ கற்றுக்கொள்ள’ நிறைய இருக்கு போல…
சிறிது கடினமான நடை. கொஞ்சம் எளிமை படுத்தி சொல்லியிருக்கலாம். ஆனால் காத்திரமான விஷயம். உலகெங்கும் நீண்டிருக்கும் மாயக்கரங்கள் இதன் பின்னும் இருக்காதா என்ன? நாடகமே உலகம் 🤷🏻♀️