Home » இறுக்கி அணைக்கிறேன், வா.
உலகம் தைவான்

இறுக்கி அணைக்கிறேன், வா.

தைவான்

தைவான், சீனாவின் ஓடுகாலிப் பிரதேசம். சீனா அதை எப்போதும் பிடித்து இழுத்துத் தன்னுடன் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கும். இம்முறை அது நடந்துவிடும். எச்சரிக்கை.

வருடந்தோறும் சீனாவின் தேசிய நாளான அக்டோபர் ஒன்றாம் தேதி இப்படியொரு வதந்தி அல்லது கவலை தைவானில் வலம் வருவது வழக்கம். ஆனால் பெரிதாக ஏதும் நடந்ததில்லை.

ஆனால் எந்த வருடமும் இல்லாத மாதிரி சென்ற ஆண்டு அக்டோபர் முதல் நான்கு நாட்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சீனப் போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் நுழைந்து திரும்பி வந்தன. இது சந்தேகமில்லாமல் அச்சுறுத்தல்தான்.

உண்மையில் இதுவரை சீனா, தைவானை தன்னுடன் சேர்த்துக் கொள்ள அமைதியான வழிகளையே கையாளும் என்பதுதான் பரவலான நம்பிக்கையாக இருந்தது. அதன் நீட்சியாக சிலர் ஹாங்காங்கை உதாரணமாகச் சுட்டி ஒரே நாடு இரண்டு சிஸ்டம் என்று கோடி காட்டினார்கள். சென்ற இதழில் ஹாங்காங் சீனாவுடன் இணைந்து இருபத்தைந்தாண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடிய கதையைப் படித்தோம் அல்லவா? அந்த மாதிரி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்