இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே சமயம் ஒரு தேசமாக இதைக் கட்டியெழுப்பிக் காப்பதிலும் சமரசமற்று இருப்பதுதான் இதில் முக்கியமானது. சுதந்தரத்துக்குப் பிறகு சமஸ்தான ஒருங்கிணைப்பு நடைபெற்றது...
Tag - நம் குரல்
ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி வைத்துவிட்டு இந்த செங்கோல் அரசியலைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பது நல்லது. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முகம் இருந்து வருகிறது...
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு என்பது வலுவானதாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் இதன் லாபங்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. மிக எளிய, மிகச் சமீபத்திய...
எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும் அதிரடியாகச் செயல்பட்டு ஒன்றிரண்டு தினங்களில் சுமார் இரண்டாயிரம் பேரைக் கைது செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய துறை, எத்தனை ஆயிரம் பேர் இதில்...
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன. அரசைக் குறை சொல்வதல்ல நோக்கம். நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைத் தேர்தல் வாக்குறுதியாகத் தரும்போது ஆய்ந்து தெளிய வேண்டியது மக்கள் பொறுப்பே. அதைச் செய்ய விடுத்து...
சில நாள்களுக்கு முன்னர் சென்னை கடற்கரையை ஒட்டிய நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்த மீன் கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தினரால் அப்புறப்படுத்தப்பட்டன. வழக்கம் போல எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்தன. பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர். மேலோட்டமான பார்வையில் இது ஒரு சிறிய, எளிய சம்பவம்...
தமிழர்கள் என்றில்லை. பொதுவாக மனிதர்கள் அனைவருமே மூன்று விஷயங்கள் சார்ந்து மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பார்கள். வேலை-வருமானம் முதலாவது. குடும்பம்-சுற்றம் அடுத்தது. மதம் உள்ளிட்ட சொந்த நம்பிக்கைகள், சார்புகள் மூன்றாவது. இந்த மூன்றில் எது ஒன்றின்மீது கல் விழுந்தாலும் உடனே பதற்றம் எழும்...
ஊழலும் மதவாதமுமே ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் நமது அரசியல்வாதிகளின் பேசுபொருளாக இருக்கும். இரண்டும் முக்கியமான பிரச்னைகள் என்பதிலோ, இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை என்பதிலோ நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவை இரண்டுமே இல்லாமல் போகும் நாள் கண்ணுக்கெட்டும் தொலைவில் இல்லை என்பதுதான் யதார்த்தம்...
ஒரு வழியாக ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த, சமூக அக்கறை மிக்க ஒரு முன்னெடுப்பை இப்படி அரசியலாக்கி, இழுத்தடித்து ஊர் சிரிக்கும்படிச் செய்திருக்க அவசியமில்லை. ஆளுநர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று...
‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை’ என்று மாவோ சொன்னதை நினைவூட்டி விட்டது மத்திய அரசு. நாம் அனைவரும் சாதாரணமாகப் பயன்படுத்தும் தயிர் விஷயத்தில் தனது முகமூடியைத் தானே விலக்கி, தனது உண்மையான முகம் இதுதான் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது...