தகவல் நெடுஞ்சாலை (information highway) என்ற அழகிய பதம் எத்தனை அர்த்தபூர்வமானது என்பதைத் தொழில்நுட்பம் வளர வளர நாம் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். எப்படி பெருநகரங்களை இணைக்கும் சாலைகள், ஒவ்வொரு தசாப்தத்திற்கும் மாற்றம் அடைந்தும், பயணம் செய்யும் தூரத்தைச் சாலைகளின் தரமும், வாகனங்களின் வேகமும்...
Tag - சீனா
‘பூவா தலையா போட்டால் தெரியும், நீயா நானா பார்த்துவிடு. பூ விழுந்தால் நீ நினைத்தபடி, தலை விழுந்தால் நான் கேட்டபடி’ எனப் பல்லாண்டுகளாக நடந்து வரும் அமெரிக்க – சீனாவின் பூவா தலையா அடுத்த கட்டத்திற்குச் சென்று இருக்கிறது. சான்ஃபாரன்ஸிஸ்கோவில் நடந்த விருந்து, சந்திப்பில் அப்படி ஒன்றும் உலகைப்...
சிவகாசியின் முதலாவது தீப்பெட்டி ஆலை நிறுவப்பட்டு இந்த வருடத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. வேளாண்மை செய்வதற்குத் தகுதியற்ற நிலமானாலும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிற தொழில் கேந்திரமாக இருக்கின்றது சிவகாசி. கந்தக பூமி என்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும்...
‘உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்’ என்பார்கள். இத்தகைய துணிச்சலுடையவர் கிம் ஜோங்-உன், வடகொரிய அதிபர். இவருக்குச் சற்றும் சளைக்காதவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வடகொரியா உருவாக உறுதுணையாக இருந்தது அன்றைய சோவியத். அதற்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் இப்போது அமைந்துள்ளது வட...
செப்டம்பர் 9 2023. டெல்லி, ஜி 20 உச்சி மாநாடு. மதிய உணவு வேளை முடிந்து அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடங்கும் நேரம். கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். மிகுந்த மகிழ்ச்சியுடன், நம் அனைவரின் கடின உழைப்பிற்குப் பயன் கிடைத்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன். டெல்லிப்...
இந்தியாவையே அதிர வைத்த மணிப்பூர் பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில் இப்போது புதிய தலைவலியைக் கொடுக்கிறது சீனா. ஆகஸ்ட் 28ஆம் தேதி சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடியது. அதில் 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது...
எண்ணெய்க் கிணறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், உலகத்தை ஆளலாம். இது இருபதாம் நூற்றாண்டின் கதை. பெரிய மாற்றமில்லை, எண்ணெய்க்கு பதிலாக லித்தியம் என்று போட்டுப் படித்தால், அது இன்றைய நிலை. உலக நாடுகள் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பசுமைத் தொழில்நுட்பத்தைத் தூக்கிப் பிடிக்கப்போகும் கனிமம் லித்தியம்...
நிலவின் தென்துருவத்தில் உறைந்த பனி இருக்கிறது. அந்தப் பனியைத் தொட்டு விடுவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. நமது சந்திரயான் அந்தப் புனித காரியத்துக்காகப் புறப்பட்டுப் போயிருக்கிறது. ஜூலை பதினான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஆரம்பித்த நிலைக்குத்துப் பயணம்...
கொசுவச் சட்டையின்(டி ஷர்ட்) கழுத்துப்பட்டை ஊதா நிறத்தில் இருக்க வேண்டும். இரு கைகளிலும், பாக்கெட்டிலும் ஊதா நிறக் கால்பந்து வரைந்திருக்க வேண்டும். மேல்பகுதியில் வெள்ளை நிறம் பிரதானமாக தொடங்க, கீழே இறங்க இறங்க, வெளிர் மஞ்சள் நிறத்தில் முடிய வேண்டும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையொட்டிய ஆடைத்...
பலரும் அண்ணாந்து பார்க்கும் வண்ணம் உயர உயரப் பறந்துகொண்டிருந்த ஒரு வண்ணமயமான பலூன் கொஞ்சம் கொஞ்சமாகத் தரையில் இறங்கினால், ஒரு வித வருத்தமே ஏற்படும். எப்போதாவது அதீத பொருளாதார நெருக்கடியில் பலருக்குக் கடன் கொடுத்துவிட்டு, நமக்கே ஒரு நெருக்கடி வரும் போது அதைத் திரும்பக் கேட்க முடியாமலும் அவர்களாகக்...