Home » “இதுவரை ஒரே ஒரு கொலைதான் என் கையால் செய்திருக்கிறேன்!”
விளையாட்டு

“இதுவரை ஒரே ஒரு கொலைதான் என் கையால் செய்திருக்கிறேன்!”

“இவ்வளவு மரியாதைக் குறைவாகவா எங்களை நடத்துவீர்கள்?” என்று கண்கலங்கி, பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கிறார் வினேஷ் போகட். காமன்வெல்த் மற்றும் ஏசியன் கேம்ஸ் இரண்டிலுமே தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீரர் இவர். இவரைப்போலவே ஒலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் ரவி தாஹியா ஆகியோர் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். பிஜேபி கட்சியின் எம்பி ப்ரிஜ் பூஷன் ஷரண்சிங்தான் அந்தத் தலைவர். மல்யுத்த வீரர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தியது என்பது இவர் மீதுள்ள புகார்கள். டெல்லியின் ஐந்தர் மந்தரில் இவர்கள் நால்வருடன் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது வேறு துறையைச் சேர்ந்த வீரர்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கிறார்கள். பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சில திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் எனப் பலர் போராட்டக் களத்துக்கு வந்தனர். மஹுவா மொய்த்ரா, கங்குலி எனப் பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆதரவாகப் பேசினார்கள்.

மே 4-ஆம் தேதி இரவு அப்படி இவர்களைப் பார்க்க வந்தவர் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம்நாத் பார்தி. அப்போது மழை பெய்து மெத்தைகள் நனைந்து உட்காரக் கூட இடமில்லாமல் நின்று கொண்டிருந்த வீரர்கள் தாங்கள் உட்கார, படுக்க மடக்கும் கட்டில்களை வண்டியில் இருந்து இறக்கினார்கள். அதைத் தடுத்த காவல் துறையால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக் குழுவில் இருந்த சிலருக்குக் காயமேற்பட்டது. குடித்திருந்த காவலர்கள் பெண் வீரர்களை அவமரியாதையாக தொட்டுத் தள்ளியதாகக் கூறினார் வினேஷ் போகத். சோம்நாத் பார்தி அனுமதியின்றி கட்டில்களைக் கொடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது என்கிறது காவல்துறை. “சிசிடிவி ஆதாரங்களைப் பார்த்தாலே தெரியும். நாங்கள் கொண்டுவந்த கட்டில்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காவலர்கள் குடித்திருந்ததை உறுதி செய்ய மருத்துவச் சோதனை நடத்தச் சொன்னதையும் செய்யவில்லை” என்கிறார் பஜ்ரங் புனியா. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்தான் மனம் உடைந்து அழுதார் வினேஷ் போகட்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • வெட்கக்கேடு, வேறென்ன சொல்வது. பேய் அரசாண்டால் 🤷🏻‍♀️

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!