Home » சித் – 2
ஆன்மிகம்

சித் – 2

2. உந்தித் தள்ளும் ஒருவர்

ஆன்மிக வாழ்வில் இருப்பவர்களைச் சாமியார், ஞானி, முனிவர், ரிஷி, சித்தர், சாது, யோகி என்று பல்வேறு பெயரிட்டு அழைக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒரே தன்மை கொண்டவர்களா என்றால் கிடையாது. ஆன்மிக நிலையில் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு விதமும் ஒரு நிலை.

வேதத்தில் இருக்கும் உண்மைகளையும் வாழ்வியல் நீதிகளையும் நமக்கு அளிப்பவர்கள் ரிஷிகள். இறை நிலையை உணர்ந்து இறை ரூபங்களாக வாழ்பவர்கள் ஞானிகள். ஆன்மிக வழியில் தமது தனிப்பட்ட வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு உலக விவகாரங்களில் இருந்து விடுபட்டு வாழ்பவர்கள் முனிவர்கள். யோக வழியில் வாழ்ந்து யோகத்தில் உயர் நிலை கண்டவர்கள் யோகிகள். உலக மக்களுக்கு போதனை செய்து வழிகாட்டும் ஆசிரியர்களாக இருப்பவர்கள் ஆசாரியார்கள்-சுவாமிகள். தன்னை இறைநிலைக்கு அர்ப்பணம் செய்துகொண்டு தன்னை இறைவனின் கருவியாக்கி ஜடம் போல வாழ்பவர்கள் சாது.

ஆன்மிகத் துறையில் இவர்களது பங்கு மகத்தானது. சாதகர்களை வழி நடத்தவும் ஆன்மிக வாழ்க்கைக்குப் புதிதாக வருவோருக்கு முன்னுதாரணமாகவும் நிகழும் வரலாறாகவும் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் யாரும் சித்தர்கள் அல்லர். அவர்கள் வேறு. மேற்சொன்ன அத்தனைப் பேரிடமும் இருந்து முற்றிலுமாக வேறுபட்டவர்கள் அவர்கள்.

சித்தர்கள் என்பவர்கள் ஒரு வகையில் மேய்ப்பர்கள். புரியும்படிச் சொல்வதென்றால், ஆன்மிகப் பாதையின் விழிப்பு நிலையில் இருப்பவர்களை நடுவில் செலுத்துவதற்கும், தேங்கி, அல்லது பின் தங்கி நிற்போரைப் பின்னால் இருந்து உந்தித் தள்ளி முன் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.

பரவிக் கிடக்கும் மண் துகள்கள் காலத்தால் இறுகிப் பாறைகளாக உறைவதைப் போல மனித மனம் தன்னுள் பரவி நிறைந்திருக்கும் கோட்பாடுகளை உறை நிலைக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. தனி மனிதனோ அல்லது குழுவோ இத்தகைய உறை நிலைக்குச் சென்றதும், அதைத் தட்டிச் செதுக்கி, வடிவம் தந்து சிலையாக்கும் பணியைச் செய்பவர்களே சித்தர்கள்.

சித்தர்கள் சாதுக்களாகவோ, ரிஷிகளாகவோ இருக்க முடியும். ஆனால் ஞானியோ, ரிஷியோ அனைவரும் சித்தர்கள் எனச் சொல்லிவிட முடியாது. இது சற்றுக் குழப்பம் தரலாம். இல்லை. எளிதுதான். இப்படிப் பாருங்கள்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!