Home » சித் – 3
ஆன்மிகம்

சித் – 3

3. நாதர்கள்

காலம் என்ற கடிகாரம் தனது பணிகளைச் செய்யும் பொழுது சித்த புருஷர்கள் அதன் முட்களாக இருக்கிறார்கள். முட்கள் பெரும்பாலும் குழப்பமாகப் புரிந்துகொள்ளப் பட்டாலும் அது இல்லை என்றால் காலம் அடுத்தக் கட்டத்திற்கு நகராது. முள் இல்லாதது கடிகாரமும் ஆகாது.

சித்த நிலை என்பது நமது விழிப்புணர்வைத் தூண்டும் வடிவம் என்பதால் நம்மில் சித்தர்கள் வினை புரியும் பொழுது நாம் இரண்டு நிலைகளுக்குள் சென்று விடுவோம். அறியாமைக்கு முன் – அறியாமைக்குப் பின் என்ற இரண்டு நிலையில் சித்தர்களைக் காண்போம். சித்தர்களை அறியாமையுடனும் அல்லது அறியாமை தெளிந்த நிலையிலும் புரிந்துகொள்ளும் தன்மை நமக்கு அமைவது அரிது. சித்த நிலை என்பது சித்தத்தைக் கடந்த நிலையே ஆகும். சித்தர்களைப் புரிந்து கொள்ள நாமே சித்தர்கள் ஆவது தான் ஒரே வழி.

சித்தர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்களுடைய பயிற்சிச் சாலை எங்கே இருக்கிறது? நாமும் அதில் இணைந்து ஒரு டிகிரியோ அல்லது டிப்ளமாவோ வாங்கி கடை நிலை சித்தராகவேனும் ஆகலாமா என நீங்கள் நினைப்பது புரிகிறது. சித்தராகப் போலி வேடம் போடுவது எளிது. ஆனால் சித்தராவது அவ்வளவு எளிதல்ல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!