Home » வாழ்க நிலமுடன்!
முதலீடு

வாழ்க நிலமுடன்!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், கொஞ்சம் பணம் சேர்ந்தால் இங்கே அவரவர் சொந்த ஊரில் நிலம் வாங்கிப் போடுவது வழக்கம். சமீப காலமாகப் பல நாடுகளில் வேலை இழந்து, அல்லது இழந்த வேலை திரும்பக் கிடைக்கப் போராடிக்கொண்டிருப்போர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வேலை கிடைப்பது ஒரு புறம் இருக்க, கையில் இருக்கும் பணத்தைச் சரியாக முதலீடு செய்துவிட வேண்டும் என்று எண்ணி அவசர அவசரமாக இங்கே ஏதேனும் ஓர் இடத்தைப் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிடுவது அதிகரித்திருக்கிறது. ஆனால் என்.ஆர்.ஐகள் இங்கே இடம் வாங்குவதில் நிறைய இடர்பாடுகள் உண்டு. கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டால் நிறைய இழக்க வேண்டியும் வரலாம். எந்தெந்த விஷயங்களில் கவனம் முக்கியம்? பார்க்கலாம்.

* நல்ல விஷயத்துடன் ஆரம்பிப்போம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்துக்கள் வாங்கலாம், விற்கலாம். அதுவும் அவர்கள் இந்தியாவிற்கு வராமலே, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே இந்தச் செயல்களை செய்யலாம்.

* முதலில் சொத்துக்கள் வாங்கும்போது செய்யவேண்டிய நடைமுறையைப் பார்ப்போம். சொத்துக்கள் வாங்கவேண்டும் என முடிவுசெய்த உடன் அது சம்பந்தமான காரியங்களைச் செய்வதற்காக இங்கு ஒரு பவர் ஏஜண்ட்டை நீங்கள் நியமிக்கவேண்டும். அவர் உங்களின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, மாமன் மச்சான், மனைவி, மக்கள், நல்ல நண்பர்கள் என யாராயிருப்பினும் நம்பிக்கையான நபர்களாக இருப்பது முக்கியம். முகமறியா மூன்றாம் நபர் அல்லது பொதுமனிதர்கள் போன்றவர்களுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கக்கூடாது. உங்களிடமிருந்து பவர் பெறுபவர், உங்களுக்கு ரத்த சம்பந்தமான உறவுமுறையாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு ரிஸ்க் குறைவு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!