ஆங்கிலத்தில் இருக்கும் இருபத்தாறு எழுத்துகளைப் புரட்டிப் போட்டு புதுப்புது பெயர்களை விஞ்ஞானிகள் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு சவால் விடும் வகையில் புதிய உள் வகைகளாக மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கிறது கோவிட் 19 கொரானா வைரஸ். கோவிட் உள் வகை ஒமிக்கரான் வைரஸ் முதல் அலை உருவானது கடந்த ஆண்டு ஜனவரியில். பி.ஏ.1, பி.ஏ2, பி.ஏ2.75, பி.ஏ5, பி.எஃப்1 எனப் பலவிதமான உள்வகைகள் பரவுவதும் பிறகு வேறொன்றாக உருமாற்றம் அடைவதுமாக இருந்தது. தற்போது பேசுபொருளாகி இருக்கும் கோவிட் ஒமிக்ரான் உள் வகை எக்ஸ்.பி.பி. 1.5. இது முந்தையதை விட வேகமாகப் பரவுவதாகச் சொல்கிறார்கள். வயதானவர்களிடையே அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
இதைப் படித்தீர்களா?
தமிழ்நாட்டை அறிவுசார் செயல்பாடுகளில் முன்னணியில் நிறுத்துவது அரசின் கனவாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதில் தொடங்கி...
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கில் நடக்கிறது மதுரை புத்தகக் கண்காட்சி. எதிர்வரும் பதினாறாம் தேதிவரை நடைபெறுகிறது. நாள்தோறும்...
Comment
-
Share This!
Add Comment