நீங்கள் ஒரு மத்தியதரக் குடும்பப் பெண்ணாக இருந்து உங்கள் குழந்தையைக் கற்றல் குறைபாடுள்ள பெண்ணாகப் பள்ளி அறிவித்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் பெண்ணும் ஆங்கிலத்தில் படிக்கத் தடுமாறுகிறாள். ஆனால் மருத்துவர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் பள்ளி சொல்வதை முயன்று பாருங்கள் என்றும் சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்? அதைத்தான் பேசாமல் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? ஆனால், ஒஹையோவில் ஜாய் பால்மர் என்ற அன்னை தன் பெண் டே லாமாவைக் கற்றல் குறைபாடுள்ள பெண்ணாகப் பள்ளி நிர்வாகம் அறிவித்தது முதல் இன்றுவரை பாடம் சொல்லிக் கொடுப்பதில் பிழை இருக்கிறது என்று தன் உள்ளுணர்வு சொல்லும் சேதியை மட்டுமே நம்பி எதிர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் அப்படி ஒன்றும் பெரும் பணக்காரர் இல்லை ஆனாலும் தன் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஒரு உத்வேகம். பாடத்திட்டங்களைப் பற்றி எதுவும் அறியாத அன்னை.
இதைப் படித்தீர்களா?
63. உதிர்த்தவன் இன்னொரு மனிதனின் மூச்சுக் காற்று இல்லாத இடத்தில் இருப்பதே அத்தருணத்தில் என் மனநிலைக்குச் சரியென்று தோன்றியது. அதன் பொருட்டே சாரன்...
63. கேட்க விரும்பாத விஷயங்கள் மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் காந்தி தாழ்த்தப்பட்டவர்கள் நலனைப்பற்றி இவ்வளவு தீவிரமாகப் பேசியது ஏன்? அதற்கென இந்து...
Add Comment