Home » கடவுளுக்குப் பிடித்த தொழில் -39
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -39

மருந்துகள், சந்தையிலிருந்து வெளியேற்றப்படும் காரணங்கள்

சென்ற அத்தியாயத்தில் விளக்கியுள்ள அனைத்துக் கட்டங்களையும் தாண்டிய ஒரு மூலக்கூறே மருந்தாக மாற்றம் பெறும். இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த மூலக்கூறு தோல்வி அடையலாம். இன்னும் சொல்லப்போனால் மருந்தாக மாற்றம் பெற்று நோயாளிக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட பிறகும்கூட அம்மருந்து தோல்வியினை அடையலாம். எவ்வாறு? ஒன்று, அம்மருந்திற்கான தேவை சந்தையில் மறைந்து போகலாம். உதாரணத்திற்கு கோவிட் தடுப்பூசியினையே எடுத்துக் கொள்ளலாம். கோவிட் நோயினை உண்டாக்கும் வைரஸ் வீரியம் இழந்த பிறகு இப்பொழுது கோவிட் தடுப்பூசியின் தேவை கடுமையாகக் குறைந்து விட்டது. எனவே கோவிட்டிற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தடுப்பூசிகள் தேவையான அளவிற்கு வருமானத்தினை, அதாவது உற்பத்தி மற்றும் விநியோகச் செலவினை ஈடுகட்டும் அளவிற்கு வருமானத்தினைப் பெற்றுத் தராத நிலைக்கு இன்னும் சில வருடங்களில் செல்ல நேரிடலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!