Home » கடவுளுக்குப் பிடித்த தொழில் – 40
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 40

தலைப்பு: உயிரியல் தொழில்நுட்பத்தில் தொழில்முனைவு

மருந்து நிறுவனங்கள் எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றன?

நான் ஓர் உயிரியல் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவன் அல்லது ஓர் எம்பிஏ பட்டதாரி அல்லது எனக்குத் தொழில்முனைவில் ஆர்வம். நான் நினைத்தால் ஒரு மருந்து நிறுவனத்தினை ஆரம்பித்துவிடலாமா? ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். ஒரு பெட்டிக்கடை ஆரம்பிப்பது போல் இது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றாலும், மிகப் பெரிய விஞ்ஞானிகள் அல்லது பண பலம் படைத்தவர்கள் மட்டுமே துவங்க முடியும் என்பது போன்ற கடினமான விசயமும் கிடையாது.

இங்கு நாம் விவாதிக்கும் விசயங்கள் மருந்து நிறுவனம் ஆரம்பிக்க மட்டுமல்ல, பயோடெக் எனப்படும் எந்தவொரு உயிரியல் தொழில்நுட்பம் சம்பந்தமான நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் இதுதான் செயல்முறை. எழுத்து எளிமைக்காக பயோடெக் என்ற பதத்தினை மட்டுமே இனி இங்கு உபயோகிக்கலாம். ஒரு பயோடெக் நிறுவனம் ஆரம்பிக்க என்ன வேண்டும்? பயோடெக் மட்டும் அல்ல எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அதற்கு மிக முக்கியத் தேவை அந்த நிறுவனம் சந்தையில் விற்க ஒரு பொருள். பயோடெக் அல்லது மருந்து நிறுவனத்தினைப் பொறுத்த வரை அந்தப் பொருள் ஓர் புதிய, வேறு யாரும் உரிமை கோர முடியாத பொருளாக இருக்க வேண்டும். எங்கிருந்து அந்தப் பொருள்கள் கிடைக்கும்? எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். பெரும்பான்மையான பயோடெக் நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக நன்றாக ஆராய்ந்து சரியான தரவுகளுடன் உள்ள பொருளையே மேற்கொண்டு மேம்படுத்தி (Further developments) சந்தைப்படுத்தக்கூடிய பொருளாக (Marketable products) மாற்றி விற்பனை செய்ய முனைகின்றன. இதற்கு விதிவிலக்காகச் சில நிறுவனங்கள் அடிமட்டத்திலிருந்து புதிதாக ஒரு பொருளை வடிவமைத்து (Design from scratch), ஆராய்ச்சி செய்து மேம்படுத்திப் பிறகு சந்தைப்படுத்த முயற்சியும் செய்யும். ஆனால் இந்த வகை நிறுவனங்கள் மிகக் குறைவு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!