Home » கரடிச் சித்தரும் ஒரு கல்யாணக் கதையும்
ஆன்மிகம்

கரடிச் சித்தரும் ஒரு கல்யாணக் கதையும்

பாரியென்னும் குறுநில மன்னன் சிறந்த வள்ளல் என்று பெயர் பெற்றிருந்தான். பெருநில மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே எந்த விஷயத்திலும் ஒற்றுமை இருந்ததில்லை. ஆனால் பாரி மன்னன் பெற்றிருந்த நற்பெயரும், பறம்புமலையின் இயற்கை வனப்பும், அதன் விளைபொருட்களின் சுவையும், தரமும் அவர்களின் கண்களை உறுத்தின. அடையத் துடித்தார்கள். பாரியை வீழ்த்தத் தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு அந்த ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டார்கள். வஞ்சகம் வலிமை அடைந்ததினால் பாரி வீழ்ந்து பட்டான்.

அங்கவை, சங்கவை என்கிற பாரி மன்னனின் இரண்டு மகள்களும் அனாதைகளாயினர். வறுமையிலும் தந்தை வழிவந்த கொடைப்பண்பு அவர்களை விட்டு அகலவில்லை. தங்களை நாடி வந்தவர்களை உபசரித்து தங்களால் ஆன உதவிகளை மற்றவர்களுக்கு செய்துவந்தார்கள். அவர்களைக் காணவந்த ஔவை மூதாட்டி , அவர்களின் நிலைக்கு வருந்தி, அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார். “வஞ்சகமாய்ப் பாரியை வீழ்த்திய பாவத்தின் பரிகாரமாக, அந்தபெண்களுக்கு திருமணம் செய்துவைத்து விமோசனம் அடையுங்கள்” என்று மூவேந்தர்களை சந்தித்து அறிவுரை வழங்கினார். ஔவையின் அழகுத் தமிழுக்கு சிரம்தாழ்த்திய மூவேந்தர்கள் ஒப்புக்கொண்டார்கள். மூவேந்தர்களின் தலைமையில் பாரிமகளிருக்கு திருமணம் இனிதே நடந்தேறியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இக் கட்டுரை மூலமாக தான் மூவேந்தர் வந்து தங்கிய இடம் அவர்கள் பெயரால் அழைக்கப்படுவது குறித்து அறிந்தேன்.சேரம் சேலமாக மருவி விட்டதும் புது செய்தி.காலங்கி சித்தரும் கரடி சித்தரும் ஒருவர் தான் என்பதும் அறிகிறேன்.கோவில் குறித்த தகவலும் அறிந்து கொண்டேன்.அருமை.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!