Home » கண்ணதாசனின் காரும் எடிசனின் கேமராவும்!
சமூகம்

கண்ணதாசனின் காரும் எடிசனின் கேமராவும்!

“பள்ளியில் படிக்கும்போது அப்பாவின் இரண்டு சக்கர வண்டியில் ஏறி ஊரைச் சுற்றி வந்த ஞாபகம் இருந்தது. வளர்ந்தபின் அந்த வண்டியைத் தேடித் போய் வாங்கி வந்தேன். என்னைப் பொறுத்தவரை அது வெறும் உலோகமல்ல. எனது நினைவுகள். எனது பால்யம். எனது தாத்தா உபயோகப் படுத்திய 1955 எஸ்டேட் ஸ்டாண்டர்ட் கம்பெனியின் கார் இன்னும் கிடைக்கவில்லை. அதைத் தேடிப் போனபோது கேரளாவில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். மதிப்பு தெரியாமல் இதைத் தவற விட்டு விட்டீர்கள் எனச் சொன்ன அதை வாங்கியவர் அதைத் தொடக்கூட விடவில்லை. என்னுடைய பெரிய வருத்தம் அது. தேடித் கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் அதையும் வாங்கி விடுவேன். மக்கள் தங்களது கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது. செல்போனிலும், டிவியிலும் தங்களது வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது. செல்போனைத் தாண்டிய ஒரு உலகம் உண்டு என அவர்கள் உணரும் நாளும் வரும். பாரம்பரியப் பெருமைகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், பெருமை கொள்ள வேண்டும். அதனால்தான் புராதனப் பொருட்களைத் தேடித் தேடி வாங்கி வந்து இந்த ம்யூஸியத்தை ஆரம்பித்தேன்” என்கிறார் எல்.எம்.லட்சுமணன்.

காரைக்குடியைச் சேர்ந்தவரான இவர் பிள்ளையார்பட்டியில் ஒரு புராதன கார், காமிரா மற்றும் கிராமபோன் அருங்காட்சியகத்தை அமைத்து இருக்கிறார். பிள்ளையார்பட்டி கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் உண்மையில் ஒரு பொக்கிஷம். பார்ப்பவர் கண்ணையும் கருத்தையும் கவர்வதோடு மட்டுமன்றி பெரியோர்களின் சிறு வயது நினைவுகளைக் கிளறிவிட்டு அந்தக் காலகட்டத்திற்குக் கொண்டு சென்று விடும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!