Home » இனி வேகுமா ஐஐடி படிப்பு பருப்பு?
வேலை வாய்ப்பு

இனி வேகுமா ஐஐடி படிப்பு பருப்பு?

2023-24-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் காலம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. பெரும்பாலான ஐ.ஐ.டி.களில் மந்தமாகத் தொடங்கிய வேலைவாய்ப்பு சீசன் உயர்நிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல ஐ.ஐ.டி. பட்டதாரிகளுக்கு இன்னும் வேலை உறுதியாகாமல் உள்ளது.  விரைவில் உறுதியாகிவிடும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். நடக்குமா என்றுதான் தெரியவில்லை. ஏனெனில், ஐஐடியில் நடப்பு ஆண்டில் படிப்பை முடித்த சுமார் 7,000 மாணவர்களுக்கே இன்னும் வேலை கிடைத்தபாடில்லை.

இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி. இங்கு சேர பள்ளிப் படிப்பு படிக்கும் போதிலிருந்தே மாணவர்கள் தயாராக வேண்டும். சுமார் ஒரு மில்லியன் மாணவர்கள் எழுதும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெறுகிறார்கள். இந்தச் சேர்க்கை விகிதம் அமெரிக்காவின் ஐ.வி. லீக் கல்லூரிகளைவிட 0.5-2% அளவுதான் குறைவு.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி பெறுவது என்பது தனி உலகம். கடின உழைப்பும் ஒழுக்கமும் சம அளவில் இருந்தால் மட்டுமே நுழைவுத் தேர்வான ஜே.இ.இ.யில் வெற்றி பெற்று ஐ.ஐ.டி. கல்லூரியில் சேர முடியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!