Home » Home 31-08-2022

வணக்கம்

இந்த இதழின் சிறப்புப் பகுதி, மாற்று மருத்துவம். நம் மக்கள் என்றென்றும் ஒரு மெல்லிய ஐயத்துடனேயே அணுகும் விஷயங்களுள் ஒன்று. மாற்று மருத்துவம் பற்றி எழுதினால் படிப்பார்கள்; யாராவது சொன்னால் கவனமாகக் கேட்டுக்கொள்வார்கள்; பக்க விளைவுகள் இல்லாத இம்மருத்துவ முறையைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்று உறுதி கொள்வார்கள். ஆனால் ஒரு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் உடனே அருகிலுள்ள அலோபதி க்ளினிக்குக்குத்தான் போவார்கள். அது சரியானதும் மீண்டும் மாற்று மருத்துவத்தின்பால் காதல் பிறக்கும்.

மக்கள்மீது தவறில்லை. பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு ‘மாற்று மருத்துவம்’ என்று பெயரிட்டு அதை இரண்டாம் பட்சமாக்கியது யாரென்று யோசித்தால் இதன் காரணம் புரிந்துவிடும்.

இந்த இதழில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விரிவான-செறிவான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. டாக்டர் சரவணகுமாரின் பேட்டி, அலோபதி மருத்துவமுறையின் முக்கியத்துவத்தை முன்னால் வைத்தே பாரம்பரிய மருத்துவ முறைகளின் சிறப்பை எடுத்துச் சொல்கிறது. டாக்டர் முஹம்மது சலீம், மூலிகைகளின் பெயரால் நடக்கும் மோசடிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

மாற்று மருத்துவம் என்பது நம் நாட்டில் மட்டும் நடைமுறையில் உள்ளதல்ல. உலகெங்கும் இது உண்டு. அமெரிக்காவில் இம்மருத்துவத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பத்மா அர்விந்த் விளக்குகிறார். ப்ரானிக் ஹீலிங் குறித்த நசீமாவின் கட்டுரை முற்றிலும் புதியதொரு திறப்பைத் தருகிறது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இயங்கும் இயற்கை முறை மருத்துவப் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் கண்டு ரிப்போர்ட் செய்திருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.

விளம்பர ஜாலங்களுக்கும் மார்க்கெடிங் மயக்கங்களுக்கும் ஆட்படாமல், உண்மையிலேயே பக்க விளைவுகளற்ற பூரண உடல் நலன் சார்ந்த அக்கறை உள்ளவர்களுக்கு இந்தச் சிறப்புப் பகுதி பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய அச்சுறுத்தும் சக்தியாகப் புறப்பட்டிருக்கும் ஹூத்தி இயக்கத்தைக் குறித்த ஓர் அறிமுகத்தினை தீபன் திருமாறன் எழுதியிருக்கிறார். ஹூத்தி அமைப்பினைக் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் கட்டுரை இதுவே.

இலங்கை நிலவரம் குறித்துத் தொடர்ந்து நமக்கு எழுதி வரும் ஸஃபார் அஹ்மத், இந்த இதழில் இலங்கை ஜனாதிபதி பதவியின் வானளாவிய அதிகாரங்களைக் குறித்து விளக்கியிருக்கிறார். அதிகாரம் ஒரு புள்ளியில் குவிக்கப்படும்போது நிகழும் அபத்தங்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் சரித்திரம்தோறும் கண்டு வந்திருக்கிறோம். தற்கால உதாரணம், இலங்கை.

சென்ற வாரம் முழுதும் செய்திகளில் மிதிபட்ட பின்லாந்து அதிபர் சன்னா மிரெல்லா மரின் குறித்து பாபுராஜ் நெப்போலியன் எழுதியுள்ள கட்டுரை, ஒரு வெற்றிப் பெண்மணியின் வேறொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவ்வண்ணமே, சொந்த நாட்டுக்கு ஓர் இடைவெளிக்குப் பிறகு சுற்றுலாவாகச் சென்ற அனுபவங்களை விவரிக்கும் ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, ஒரு தேசத்தின் மறு முகத்தைத் துலக்கிக் காட்டுகிறது.

மெட்ராஸ் பேப்பர், தமிழில் வெளிவரும் ஒரே சர்வதேச வார இதழ். தமிழில், வேறெந்தப் பத்திரிகைகளிலும் உங்களுக்குப் படிக்கக் கிடைக்காதவை அனைத்தும் இங்கே ரசிக்கக் கிடைக்கும். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள். இது, நாம் சேர்ந்து இழுக்கும் தேர்.

வாசகர்கள் அனைவருக்கும் மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

 • சிறப்புப் பகுதி: மாற்று மருத்துவம்

  வரலாறு முக்கியம்

  எது இயல்பு? எது மாற்று?

  நமக்குப் பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். அவர் நம்மைச் சோதனை செய்துவிட்டு, நம்மிடமும் என்ன செய்கிறது என்று...

  வென்ற கதை

  ‘இங்கே ரகசியங்கள் ஏதுமில்லை’ – டாக்டர் சரவணகுமார்

  தமிழ் இணையம் நன்கு அறிந்த பாரம்பரிய மருத்துவர் சரவணக்குமார். டாக்டர் சரவ் என்றால் உடனே தெரியும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அவரது...

  மருத்துவ அறிவியல்

  தொடாமல் நீ மலர்வாய்!

  துபாய் மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெருஞ்சத்தம், என் காதுகளை மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும்...

  மருத்துவ அறிவியல்

  “அமேசான் காட்டு அரிய வகை மூலிகைகளை நம்பாதீர்கள்!” – டாக்டர் முஹம்மது சலீம்

  பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லப்படுகிற மாற்றுமுறை மருத்துவம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; அவற்றால் எல்லாவித நோய்களையும் குணப்படுத்த...

  மருத்துவ அறிவியல்

  யோகா, ஆயில் மசாஜ், மண் குளியல்…

  அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவத் துறை எப்படிச் செயல்படுகிறது? நேரில் பார்த்தறியப் புறப்பட்டோம். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு...

  மருத்துவ அறிவியல்

  கூகுள் மருத்துவர் ஆகிவிடாதீர்கள்!

  அமெரிக்காவில் மாற்று மருத்துவத்துறை எப்படிச் செயல்படுகிறது? விவரிக்கிறது இக்கட்டுரை. மேற்கத்திய (அலோபதி) மருத்துவத்திற்குத் துணையாகவும் மாற்றாகவும்...

  கையளவு உலகம்

  உலகம்

  ‘ஏஞ்சல்’: ஒரு டபுள் ஏஜெண்ட்டின் கதை

  உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு உக்கிரமடைந்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி, அநேகமாக அனைத்து மேலை நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று, ரஷ்யாவின்...

  உலகம் வாழ்க்கை

  ஒட்டகம் மேய்த்தால் என்ன கிடைக்கும்?

  துபாயில் ஒட்டகம் மேய்ப்பது தொடர்பான ஜோக்குகளை எவ்வளவோ கேட்டிருப்போம். உண்மையில் ஒட்டகம் மேய்ப்பது என்றால் என்னவென்று தெரியுமா? தெரிந்துகொள்வோம்...

  ஆளுமை உலகம்

  ஒரு வழியாக மன்னர்

  பிறந்ததிலிருந்து ஒரு பதவிக்காகத் தயார் செய்யப்பட்டு எழுபத்து மூன்றாவது வயதில் அந்தப் பதவியை அடைவது என்பது உலக சரித்திரத்தில் ஒரு புதுமையான விஷயமே...

  ஆளுமை உலகம்

  உலகப் பெரும் புள்ளிகளின் ஒரு நாள் கழிவது எப்படி?

  நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து...

  ருசிகரம்

  நம் குரல்

  ‘சூத்திரர்கள்’ என்பவர்கள் யார்?

  தமிழக பாஜகவினருக்கு, மக்களின் அன்றாடப் பிரச்னைகளெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. கி. வீரமணிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், ஆ. ராசா பேசிய பேச்சுத்தான்...

  நுட்பம்

  தூக்கிப் போடாதே!

  ‘புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது’ என்று பாடி ஆடிக்கொண்டே சிம்லாவை வலம் வரும் எம்.ஜி.ஆரின் கையில் இருக்கும் அந்த சிவப்புப் பெட்டியை...

  நம் குரல்

  ‘நீட்’ என்னும் வன்முறை

  இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு; அதுதான் ‘நீட்’ தேர்வு. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்யவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக்...

  நுட்பம்

  தெரிந்த செயலிகள், தெரியாத செயல்கள்

  பூமியில் இன்று ஆண்டவன் இல்லாத சந்து பொந்துகள் சில இருக்கலாம். ஆனால் ஆண்டிராய்ட் இல்லாத இடமே இல்லை. ஆன்ட்ராய்ட் செல்பேசியில் பலரும் பயன்படுத்தும்...

  தொடரும்

  தொடரும் நாவல்

  ஆபீஸ் – 17

  17 வீடும் பொருளும் டிவி வரப்போகிறது என்பதில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை. காரணமேயில்லாமல் ஆபீஸில் அங்குமிங்கும் போய்வந்துகொண்டு இருந்தான். சாவித்ரி மேடம் முதல் சிப்பாய் பாபு வரை, செக்‌ஷனில் இருந்த அத்தனைப்பேரும் என்ன விஷயம் என்று கேட்குமளவிற்கு பரபரப்பாக இருந்தான். யாரிடமும் பிடிகொடுத்துப்...

  Read More
  வெள்ளித்திரை

  தொண்டர் குலம் – 16

  16. ஒலியும் ஒளியும் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்றான தெருக்கூத்து பற்றி நாம் அறிவோம். பெரும்பாலானோர் உங்களது சிறுவயதில் திருவிழா சமயத்தில் தெருக்கூத்து பார்த்திருப்பீர்கள். இப்போதும் பல கிராமப் பகுதிகளில் திருவிழா நேரத்தில் தெருக்கூத்து நடத்தப்படுகிறது. தெருக்கூத்துக் கலைஞர்கள் ஒப்பனை...

  Read More
  ஆன்மிகம்

  சித் – 17

  17. அது வேறு உலகம் தோற்றமும் முடிவும் இல்லாத சில சித்தர்களைக் கண்டோம். இன்னும் எவ்வளவே பேர் இவ்வரிசையில் இருக்கிறார்கள். அவர்களையும் அறிவதற்கு முன்னால் சித்தர்களின் உலகைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம். சித்தர்கள் உலகம் எங்கே இருக்கிறது? அங்கே செல்ல என்ன மாதிரியான வாகனத்தில் செல்ல வேண்டும்? அந்த...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை – 17

  17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தன் மகனை ஒரு நண்பன் போல நடத்தினாலும், அப்பாக்கள், அப்பாக்கள்தானே? ஜவஹருக்கு வேண்டிய அளவுக்குப் பணம்...

  Read More
  தொடரும்

  என் கனவை விட்டுச் செல்கிறேன் – 17

  17. குளமும் கடலும் “புனித நூல்களை உங்கள் மதம் என்று எண்ணி விடாதீர்கள். அவை சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சொற்கள் மனிதர்களைப் பிரித்து விடுகின்றன. சொற்கள் மனித குலத்தையே பிரித்து வைத்துள்ளன. மனிதர்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் செங்கற்களால் கட்டப்படவில்லை. சொற்களாலேயே...

  Read More
  error: Content is protected !!