‘மாமியார்’ என்ற சொல்லே வில்லி போலச் சித்திரிக்கப்பட்டது, பார்க்கப்பட்டது எல்லாம் அந்தக் காலம். பழைய பந்தா மாமியார் எல்லாம் இன்று டிவி சீரியல்களோடு...
வணக்கம்
இந்திய சுதந்திரத்துக்கும் சல்மான் ருஷ்டிக்கும் சம வயது. ஹாதி மதார் என்கிற இருபத்து நான்கு வயது மத அடிப்படைவாதி ஒருவன் அம்மூத்த எழுத்தாளரின் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறான். பல இடங்களில் கத்திக் குத்து. ருஷ்டியின் ஒரு கண் பார்வை அநேகமாக இனி இல்லாது போகும் என்று தெரிகிறது.
அவன் ருஷ்டியைப் படித்திருப்பானா, அவரைக் குறித்து அவனுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா, இஸ்லாத்தையாவது அவன் முழுதும் அறிந்திருப்பானா போன்ற வினாக்களுக்கு விடை இல்லாத காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த இரானியத் தலைவர் அயாதுல்லா கொமேனி காலமாகியே முப்பத்து மூன்று வருடங்களாகிவிட்டன. நபர்கள் மறையலாம்; அடிப்படைவாதமும் அது உருவாக்கும் கொலை வெறியும் அப்படியேதான் இருக்கின்றன. நாம் வாழும் இக்காலக்கட்டத்தின் ஆகப் பெரிய அபாயம் இதுவே.
நரேந்தர் தபோல்கர், கௌரி லங்கேஷ், கே.கே. கல்புர்கி என்று இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் மரணத்தின் பின்னணியில் இருந்து இயக்கியதும் இதே மத அடிப்படைவாதம்தான். இந்த மதம் அந்த மதம் என்ற பாகுபாடே இதில் இல்லை. ஒரு பெரும் சமூகத்துக்குப் பொதுவான மந்தை மனோபாவத்தை உருவாக்கி, அதை வன்முறையில் ஊற வைத்து, வார்த்தெடுக்கும் பணியையே இவர்கள் காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். உலகெங்கும் நிகழ்வது இது. எல்லா நாடுகளிலும். எல்லா மதங்களிலும். எல்லா காலக்கட்டங்களிலும்.
அந்த இளைஞன் ருஷ்டியின் ஒரே ஒரு புத்தகத்தையாவது முழுதும் படித்திருந்தால் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. மதவாதிகளால் ஒரு சாத்தானாகச் சித்திரிக்கப்படும் அம்மனிதர் எவ்வளவு சிறந்த மனிதநேயம் கொண்டவர் என்பது அவனுக்குப் புரிந்திருக்கும். அமைப்புகளையும் அரசுகளையும் அரசியல் போலிகளையும்தான் அவர் விமரிசித்தாரே தவிர, மனித குலத்தின் மீது அவருக்குள்ள உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் எல்லையற்றது.
சென்ற ஆண்டு இந்தியாவில் கோவிட் தொற்று உக்கிரமாகப் பரவிக்கொண்டிருந்த சமயம். இங்கே கொத்துக் கொத்தாக நிகழ்ந்துகொண்டிருந்த மரணங்களைக் காணச் சகிக்காமல் சர்வதேச சமூகத்திடம் இந்தியாவுக்கு உதவச் சொல்லி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த முதல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
மும்பையில் பிறந்தவர் என்பதற்கு அப்பால் இந்தியாவுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பிரிட்டிஷ் எழுத்தாளர். அமெரிக்காவில் வசிப்பவர். பிரச்னைக்குள்ளான அவரது ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முதல் முதலில் தடை செய்த நாடு இந்தியா. அதன்பின் ஒரு சுற்றுலாப் பயணியாகவோ, இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுக்கவோகூட அவர் இந்தியாவுக்கு வருவது சிக்கலுக்குள்ளானது. (2012ம் ஆண்டு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதாக இருந்து, மத அடிப்படைவாதிகளின் மிரட்டலால் திட்டத்தைக் கைவிட்ட சம்பவம் ஒன்று உள்ளது.)
இன்றைக்கு அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில்கூட, அவர்மீது நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து இங்கிருந்து எத்தனைப் பேர் பேசியிருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கலாம். கலைஞர்களை-எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டாம். குறைந்தபட்சம் மதிக்கக்கூடத் தெரியாத - மதிப்பை வெளிக்காட்டினால் சிக்கல் வருமோ என்று அஞ்சி நடுங்கும் சமூகமாக இதனை மாற்றி வைத்திருக்கும் சக்தி எது?
வருத்தப்பட்டு உச்சுக் கொட்ட வேண்டாம். வெட்கித் தலைகுனியவும் வேண்டாம். சிறிது சிந்திக்கலாம். நமது பெரும்பாலான பிரச்னைக்குக் காரணம், சிந்திப்பதை நிறுத்திவிட்டு, எதையாவது அல்லது யாரையாவது கண்மூடித்தனமாகப் பின்பற்றிப் போவதே.
சல்மான் ருஷ்டி நலம் பெற்று மீள நம் பிரார்த்தனைகள்.
சிறப்புப் பகுதி: மாமியார் (எக்ஸ்போர்ட் குவாலிடி)
வெளி நாடுகளுக்கு வரும் மாமியார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கட்டும். அவர்களை வரவேற்கத் தயாராகும் என்.ஆர்.ஐ மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...
கடல் தாண்டி வேலை பார்க்கும் மகன்கள். கர்ப்பமாகும் மருமகள்கள். பேறுகாலத்திற்கும் பி்ள்ளை வளர்ப்பி்ற்கும் வேறு நாடு செல்லும் மாமியார்கள். அச்சூழல்...
இந்தக் கொரோனா லாக் டவுன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த ஜீவன்கள் வெளிநாட்டில் வசிக்கும் மாமியார்கள் தான். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் அப்...
உலகைச் சுற்றி
அமீரகத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாள்களை விநியோகிப்பதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு...
நம்மைச் சுற்றி
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே...
தொடரும்
147. உடைந்தது காங்கிரஸ் மந்திரிசபையைக் கூட்டி, அவர்கள் ஆதரவை உறுதி செய்துகொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில் பலப்பரீட்சை நடத்தி, தன் வலிமையைக் காட்ட முடிவு செய்தார் இந்திரா காந்தி. அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டினார். லோக் சபாவில் மொத்தம் இருந்த 297...
நெருப்பின் நாக்குகள் தகவல் அறிந்து தீயணைப்புத்துறை வந்து பார்த்தபோது வீடு முற்றிலும் எரிந்து நாசமாகியிருந்தது. மெர்க்கேப்டேனின் மெலிதான வாடையைக் காற்றில் அப்போதும் உணரமுடிந்தது. சமையல் எரிவாயுவாக நாம் பயன்படுத்தும் பியூட்டேன் வாயுவுக்கு மணம் கிடையாது. எனவே, கசிவைக் கண்டறியும் பொருட்டு அதனுடன்...
48. பங்காளி ஆகலாம் உங்கள் தெரு முனையில் ஒரு சிறிய இட்லிக் கடை இருக்கிறது. நீங்கள் அவ்வப்போது அங்கு சாப்பிடுவதுண்டு. இட்லி, மூன்று வகைச் சட்னி, சாம்பார் என்று அனைத்தையும் சுவையாகவும் தரமாகவும் மலிவாகவும் தருகிற அந்தக் கடைக்காரரைப் பாராட்டுவதும் உண்டு. ஒருநாள், இட்லியைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி...
9 முகாம் ஊரின் தார் ரோட்டுக்குச் சம்பந்தமேயில்லாதபடி திடீரென சாலை மண்ணாக மாறிவிட்டிருந்தது. கடலையொட்டி இருக்கிற விவேகானந்த கேந்திரம் என்பது பெரிய வளாகம் என்று சுந்தரேசன் சொல்லியிருந்தார். தொலைவில் கடலின் இரைச்சல் கேட்பதுபோலக்கூடத் தோன்றிற்று. எனினும் ஓரங்களில் முட்செடிகளும் புதருமாக இருந்த சாலை...
மனத்தின் கண்ணாடி குட்டிச்சாத்தான் நம் வேலைகளை இலகுவாக்குகிறது. ஆனால் வேலை மட்டுமா வாழ்க்கை? மனத்தை மகிழ்வாக வைத்திருப்பதும் அவசியம். அதற்கான பொழுதுபோக்கிற்கும் குட்டிச்சாத்தான்களைப் பயன்படுத்த முடியும். அப்படியொரு ப்ராம்ப்டைத்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். என்ன பொழுதுபோக்கு? முன்னர் தொலைக்காட்சி...
18. சேற்றில் புரளும் எருமை வாழ்வில் சோர்வு என்பதை அடையாதோர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எவ்வளவுதான் மிகவும் விருப்பமான பணியில் இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது சோர்வு ஏற்படுவது இயற்கை. அப்படியான சோர்வு ஏற்படும் நேரங்களில் சிலர் தங்களை வருத்தித் தொடர்ந்து...
தமிழ்த் திரைப்பட சண்டைக்காட்சிகள் – பாகம் 1/3 எம்ஜியார், மற்போர், சிலம்பம், வாட்போர், குத்துச்சண்டை, சுருள் கத்தி வீச்சு எனப் பல சண்டைக்கலைகளைத் திரையில் அனாயாசமாகச் செய்துகாட்டினார். அந்தக் கலைகளின் ஆசானாக அவரை ரசிகர்கள் ஏற்றனர், அதனால் அவருக்கு ‘வாத்தியார்’ என்னும் பட்டத்தை...