Home » ஓங்கி ஒலித்த பழங்குடிக் குரல்
ஆளுமை

ஓங்கி ஒலித்த பழங்குடிக் குரல்

நியூசிலாந்து பெண் எம்பி ஹனா மைப்பி க்ளார்க்

நியூசிலாந்தின் இளம் எம்பி, மைபி கிளார்க்

கடந்த டிசம்பரில் டெல்லி லோக்சபாக் கூட்டத்தில் நிகழ்ந்த கலர்ப் புகை புஸ்வாண சம்பவம் நினைவிருக்கும். பொதுவாகவே நாடாளுமன்றங்களில் வினோதமாக எது நடந்தாலும் அது உடனே பரவலான கவனத்தைப் பெறும். அப்படியொன்றுதான் சென்ற வாரம் நடந்தது. இங்கில்லை… நியூசிலாந்தில்.

ஹனா மைபி கிளார்க், வயது 21. நியூசிலாந்தின் மாவோரி பழங்குடியைச் சேர்ந்தவர். இவரின் காணொளிதான் சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகப் பகிரப்பட்டு, உலகம் முழுவதும் பேசப்படுகிறது. எதற்காக..? கடந்த 170 வருடங்களில் நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண் உறுப்பினர் மைபி கிளார்க் தான்.

முதல் நாள் உரையில், தன்னுடைய கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களின் பாரம்பரிய ‘ஹக்கா’ போர் முழக்கத்தைச் செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். அவர் அதைச் செய்தபோது அரங்கிலிருந்த மக்களும், உறுப்பினர்களில் சிலரும் உடன் சேர்ந்து அரங்கத்தைச் சிறிது நேரம் அதிர வைத்துவிட்டனர். அத்தனை அழகாகவும் கம்பீரமாகவும் அவர் உரையாற்றியதைத் தான் அனைவரும் வியந்து பார்த்துப் பாராட்டியும், தம் கருத்துகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!