Home » அமலாக்கத் துறை என்னவெல்லாம் செய்யும்?
இந்தியா

அமலாக்கத் துறை என்னவெல்லாம் செய்யும்?

மும்பை ஓபிஎம் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டுபேர் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவானது 2008-ஆம் ஆண்டில். இதன் அடிப்படையில் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தது அமலாக்கத்துறை. இதுதான் பிஎம்எல்ஏ-வின் கீழ் இந்தியாவில் பதிவான முதல் வழக்கு. பிஎம்எல்ஏ (PMLA – Prevention of Money Laundering Act 2002) என்பது பணமோசடி அல்லது பணத்தை வெள்ளையாக்குவதைத் தடுக்கும் சட்டம். இது ஒரு கிரிமினல் சட்டம்.

இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இருந்து ஒரு கட்டத்தில் இவர்கள் எட்டுப் பேரும் விடுவிக்கப்பட்டார்கள். அதன் அடிப்படையில், 15 வருடங்களுக்குப் பிறகு பிஎம்எல்ஏ வழக்கில் இருந்தும் இவர்களை விடுவித்தது சிறப்பு நீதிமன்றம். “முன்னர் பதிந்த வழக்கில் குற்றம் இல்லை (in absence of a predicate offence)” என்பது காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிக அதிகாரம் உள்ள சிபிஐ, வரிமானவரித் துறை போன்ற அமைப்புகளுக்கும் அமாலாக்கத் துறைக்கும் உள்ள முதன்மையான வித்தியாசம் இதுதான்.

சிபிஐ அல்லது வருமானவரித் துறை, தங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையிலோ அல்லது சந்தேகத்தின் அடிப்படையிலோ விசாரணையைத் தொடங்கலாம். வழக்குப் பதியலாம். ஆதாரங்களைத் திரட்டலாம். ரெய்டு நடத்தலாம். ஆனால் அமலாக்கத்துறை, உறுதியாகக் குற்றம் நடந்த முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

குற்றம் நடந்த முகாந்திரம் இருந்தால் எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை மற்ற அமைப்புகளால் பதியப்படும். அதன் அடிப்படையில் குற்றங்களை நிரூபிக்கத் தேவையான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்ளும். கஸ்டடியில் எடுத்து விசாரிப்பது, தாங்கள் கையாளும் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வது, லாக் அப்பில் வைத்திருப்பது, ரெய்டு நடத்துவது, சொத்துகளை முடக்குவது… இப்படி அந்த நடவடிக்கைகளின் எல்லை பெரிது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!