Home » புதிய பாதையே வெற்றிக்கு வழி – ‘பாரத் மேட்ரிமோனி’ முருகவேல் ஜானகிராமன்
வென்ற கதை

புதிய பாதையே வெற்றிக்கு வழி – ‘பாரத் மேட்ரிமோனி’ முருகவேல் ஜானகிராமன்

முருகவேல் ஜானகிராமன்

நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் தான் தொண்ணூறுகள் வரையிலும் நம் ஊரில் மாப்பிள்ளை/ பெண் தேடும் படலங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் ஐந்து பத்துப் பேரைப் பார்த்து விசாரிப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில், தன் இணையத் தளம் மூலம், தடாலடியாக லட்சக்கணக்கான வரன்களை அள்ளிக்கொண்டு வந்து போட்டு, கல்யாணக் கனவுக் கதவுகளை அகலமாகத் திறந்துவிட்டவர் முருகவேல் ஜானகிராமன்.

1996 இல் அமெரிக்காவில் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு உதவும் வகையில் தமிழ்க் காலண்டர், நண்பர்கள் குழு, என்று பல சேவைகளைக் கொண்ட தளத்தைச் சிறிய அளவில் முருகவேல் தொடங்கினார். அதில் இடம்பெற்றிருந்த பல சேவைகளில் ஒன்று தான் திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனி தளம். அப்படி ஒரு ஹாபியாக இவரால் தொடங்கப்பட்ட அது இப்போது ஆண்டிற்கு நாநூறு கோடிக்கும் அதிகமாக வருவாயை ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள். மூவாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள். இருபது பெருநகரங்களில் நூற்றிப் பத்துக் கிளைகள் என விரிந்திருக்கும் இந்த நிறுவனம் இன்று கிட்டத்தட்ட 60% இணையத் திருமணச் சந்தையைக் கைப்பற்றியிருக்கிறது.
தொண்ணூறுகளின் இறுதியில் இந்த யோசனையைக் கொண்டுவந்து, அதன் ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொள்ளும் போது இவர் தனி ஆள்தான். ஒற்றையாளாகத் தொடங்கி இன்று புகழ்பெற்ற ஓர் அகண்ட வலைக் கட்டமைப்பை எப்படி உருவாக்க முடிந்தது..?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!