Home » ‘I’ யோவென அலறாதீர்கள்!
நுட்பம்

‘I’ யோவென அலறாதீர்கள்!

புது போன் வாங்க கடைக்குப் போகிறோம். போன காரியம் முடிந்தது என்று போனை வாங்கிக்கொண்டு அங்கே இங்கே பார்க்காமல் திரும்பி வந்துவிடுவோமா? நமக்குக் கட்டுப்படியாகும் மாடல்களைப் பார்த்து, வாங்குவது ஒரு பக்கம் என்றால் ஓரக் கண்ணால் அங்கே இருக்கும் வெள்ளை மேடையில் பளப்பளக்கும் ஐபோன் வகையறாக்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுவோம். கிட்டே போய் அதைத் தொட்டுப் பார்க்கலாமா, விலை என்னவென்று கேட்கலாமா என்று தோன்றும். தள்ளுபடி இருந்தால் முயற்சி செய்யலாமே என்று தோன்றும். ஆனால் அவன் என்றைக்குத் தள்ளுபடியெல்லாம் தந்திருக்கிறான் என்றும் தோன்றும். பெருமூச்சு விட்டபடி வத்தலோ தொத்தலோ சீன தயாரிப்பில் ஏதோ ஒரு ஆன்ட்ராய்ட் செல்பேசியை வாங்கிக்கொண்டு வீடு வருவோம். அதன்பின் அடுத்த போன் வாங்கக் கடைக்குப் போகும் வரை ஆப்பிளை நினைக்க மாட்டோம்.

சராசரி இந்தியர்கள் அனைவருமே இப்படித்தான். ஆப்பிள் நம் பட்ஜெட்டுக்குள் அடங்காத சரக்கு என்பது பல காலமாக நம் ஜீன்களில் கலந்து கரைந்துவிட்ட ஓர் எண்ணம். உண்மைதானா?

தற்போது விற்பனையாகும் பதிப்புகளில் புதிது ஐபோன் 13. எண்ணைக் கேட்டவுடன் பதற வேண்டாம். மற்றவர்களுக்குத் தான் அது அபசகுன எண். கடவுளின் (ஜீசஸ்) போன் என்று பக்தியோடு அழைக்கப்படும் ஐபோனை அந்த எண் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஐபோன் 13 நான்கு வகைகளில் கிடைக்கிறது. ஆரம்ப வகையின் பெயர் (வெறும்) ஐபோன் 13, அதன் விலை ரூபாய் என்பதாயிரம். இதற்குக் கீழே இருப்பது ஐபோன் 13 மினி. அது எழுபதாயிரம் ரூபாய். ஐபோன் 13இல் இருக்கும் திரையின் அளவு 6.1 இன்ச், ஐபோன் 13 மினியில் உள்ளது 5.4 இன்ச். இந்த ஒன்றைத் தவிர இரண்டுக்கும் வேறு வித்தியாசமில்லை. இரண்டிலுமே 128 ஜிபி அளவு நினைவகம்தான் இருக்கிறது. அரை இன்சுக்கு பத்தாயிரமா என்றுக் கேட்கக் கூடாது. அதுதான் ஆப்பிள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!