Home » Archives for May 1, 2024

இதழ் தொகுப்பு May 1, 2024

நம் குரல்

இதுவும் இயற்கைப் பேரிடர்தான்!

இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம் உண்டு. ஆனால் நூறு பாகையைத் தொடும்போதே இம்முறை வெளியே தலை காட்ட முடியாதிருக்கிறது. வெப்ப அலை என்கிறார்கள். வேறு பலவும் சொல்கிறார்கள். மொத்த உலகமுமே...

Read More
aim தொடரும்

AIM IT – 3

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 3

3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...

Read More
உணவு

பட்சணங்களில் நான் பக்கலவாவாக இருக்கிறேன்!

பொதுவாகச் சுற்றுலா சென்றோமென்றால் பின்னாளில் நினைத்து மகிழ ஆயிரம் நினைவுகள் சேகரமாகும். எனக்கு துருக்கிப் பயணம் அப்படித்தான் அமைந்தது. நகரத்தின் பழமை கண்களுக்கும் மனத்துக்கும் நிறைவைத் தந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் டமாஸ்கஸைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த உதுமானியர்கள்தான் அதற்குக் காரணம்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 3

3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...

Read More
உரு தொடரும்

உரு – 3

பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...

Read More
உலகம்

பெருமுதலாளிகளின் சிறு விளையாட்டு

“நாங்கள் மீண்டும் உக்ரைனுடன் இணைவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. எங்களைக் காப்பாற்ற இங்கு யாரும் வருவதில்லை” என்கிறார் கெர்சோன் நகரில் வசிக்கும் கலீனா. இரண்டு வருடங்களாக ரஷ்யாவின் பிடியிலிருக்கும் பகுதி இது. உக்ரைனால் மீட்கப்படுவோம் என்ற கனவுகளுக்கு இனி இடமில்லை என்ற நடைமுறை...

Read More
திருவிழா

வாழும் கூத்து

கடந்த செவ்வாய்கிழமை சித்ராபௌர்ணமி. அன்றைய தினம் சேலம் மாவட்ட கிராமப் புறங்களில் நிறைய தெருக் கூத்துக்கள் நடத்தப்பட்டன. கூத்துக்கலையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் சேலம் மாவட்டம் அதை விடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதில் அந்தப் பிராந்தியவாசிகளுக்கு ஒரு தனி மகிழ்ச்சி உண்டு...

Read More
இந்தியா

ஒரு நாடு, ஒரு வானம்

நாளொன்றுக்கு ஆயிரத்து இருநூறு சொச்சம் விமானங்கள் விண்ணில் ஏறும் / தரை இறங்கும். கொஞ்சம் மெனக்கெட்டுக் கணக்கு பார்த்தால், நிமிடத்திற்கு ஒரு விமானம் வருவதும் போவதுமாக இருக்கும். 2023 – 24 ஆண்டில் மட்டும் 7 .2 கோடி பயணிகள். இது டெல்லி விமான நிலையத்தின் கணக்கு மட்டும் தான். நாட்டின் பிற...

Read More
தமிழ்நாடு

அகதி முகாமிலிருந்து ஒரு ஓட்டு!

“அகதி முகாம்களில் சுமூகமான சூழல் நிலவினாலும் இதுவொரு திறந்தவெளிச் சிறை போலத்தான் எங்கள் மனதில் தோன்றும். இப்படியில்லாமல் சுதந்திரமாக வெளியில் செல்ல வேண்டும் என்பதுதான் என் நெடு நாள் ஆசை. எனக்கு முப்பத்தி எட்டு வயதாகி விட்டது. இந்தக் கொட்டப்பட்டு முகாம்தான் என் உலகம். வெளியுலகில் என்ன...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!