Home » 2024: தேர்தல்களின் கும்பமேளா
உலகம்

2024: தேர்தல்களின் கும்பமேளா

நவ கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் நிற்பதைப் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தேர்தல்கள் இந்த ஒரே ஆண்டில் நிகழவிருக்கின்றன. பூமிப்பந்தில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் தங்கள் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வாக்குகளை அடுத்தடுத்த மாதங்களில் அளிக்கவிருக்கிறார்கள்.

ஒன்றுமில்லை…. நம் ஊரில் ஒரு வார்டு தேர்தல் வந்தாலே பேட்டை களைகட்டும். கும்பமேளாவைப் போல ஐம்பது அறுபது நாடுகள் ஒரே ஆண்டில் தேர்தலைச் சந்திக்க நேர்ந்தால் என்னவாகும்..? அமெரிக்கா, இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட முதல் பத்து நாடுகளில் எட்டு நாடுகள் இதில் வருகின்றன. மீண்டும் இதேபோன்ற அமைப்பு 2048 வரை வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.

தேர்தல் என்ற பெயர்தான் பொதுவானதே தவிர அது நடைபெறும் விதமல்ல. மாதக்கணக்கில் வாக்குப்பதிவு நடக்கும் நாடுகள் முதல் பெரும் ஜனத்தொகை இருந்தாலும் ஒரே நாளில் தேர்தலை முடிக்கும் நாடுகள் வரை பார்த்திருக்கிறோம். ஏன்… எதிர்க்கட்சிகளே இல்லாமல் வாக்குப்பதிவினை நடத்துபவர்களும், தீர்ப்பை எழுதிவிட்டுத் தேர்தலை அறிவிப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்..? சிறியதும் பெரியதுமாக நாடுகள். ஒவ்வொரு தேர்தலின் முடிவுகளும் மற்ற நாட்டின் மீது குறைந்தபட்ச தாக்கத்தையாவது ஏற்படுத்தாமல் போகாது. அதில் சிலவற்றின் நிலவரத்தைப் பார்க்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!