மனிதனின் குணங்களைக் கற்பனையாக ஜடப்பொருள், விலங்கு அல்லது கடவுளின் மீது ஏற்றப்படுவது உலக வழக்கம்தான். இலக்கியங்களில், திரைப்படங்களில் இதனைக் காணலாம். தமிழில் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ போன்ற அறிவியல் புனைகதைகளில் சிந்திக்கும் இயந்திரத்தை அறிந்திருப்போம். இக்கற்பனையின் விளைவாக...