Home » பச்சைக் கறிக்கு வெகாறி
உணவு சிறுகதை

பச்சைக் கறிக்கு வெகாறி

கடவுள் ஞாயிற்றுக் கிழமையைக் கண்டு பிடித்ததே கவுச்சி திங்கத்தான் என்பது ஒப்பிலியப்பனின் ஐதீகம். ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் – ஏதோ ஒரு மாமிசம் இல்லாமல் அவனுக்கு அன்று மத்தியானச் சோறு இறங்காது.

மற்ற நாட்களிலும் ஒந்நராடமாவது (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) இரவுணவுக்கு முட்டையோ, கருவாடோ வறுத்துப் பக்கத்தில் வைத்தால்தான் ‘வாயை மூடிக்கொண்டு’ சாப்பிடுவான். இல்லாவிட்டால் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான காய்கறி என்றாலும், “என்னடீது, இன்னைக்கும் அய்யிரூட்டு சமையலே ஆக்கி வெச்சிருக்கற? நாக்குக்கு ஒணத்தியா நாத்த ஜட்டமில்லாம மனுசன் அன்னாடும் எப்புடி மண்ணு மாற மானங்கெட்ட சோறு திங்கறது?” என்று மொண மொணத்தபடியே அரை வகுத்தோடு எழுந்துவிடுவான்.

அப்பன் எட்டடி என்றால் பிள்ளைகள் பதினாறடி, முப்பத்தி ரெண்டடி.

வாராந்திரம் ஞாயிறுகளில் ஏதோவொரு டிஸ்கவரி சேனல், வட்டலுக்கு வந்தாக வேண்டும். இடை நாட்களில் முட்டை, கருவாடு, உப்புக் கண்டம், ஆட்டுக் கால் போன்றவற்றை விழுங்குவதற்கும் குறைவிராது. என்றாலும், “நாயத்துக் கௌம எப்பம்மா வரும்?” என்று ரெண்டாம்ப்பு யோகேஷ் நச்சரித்துக்கொண்டேயிருப்பான். மற்ற நாட்களில் சப்பாத்தி, பூரி என சிறப்புச் சிற்றுண்டிகள் செய்தாலுமே பசிக்கில, வேண்டாம் என்று சரியாகச் சாப்பிடவே மாட்டாத அவன் ஞாயிறுகளில் ஐந்து வேளை சாப்பிடுவான்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!