Home » காட்டுக்குள் ஒரு கல்வித் தந்தை
சமூகம் பழங்குடி மக்கள்

காட்டுக்குள் ஒரு கல்வித் தந்தை

ஜடையன்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து தொடங்கும் மலைக் குவியல்களுக்குள் ஒளிந்து கிடக்கும் முப்பத்து மூன்று மலை கிராமங்களில் ஒன்று கொங்காடை. சுமார் எண்பது ஊராளிப் பழங்குடிகள் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் ஒரு வீட்டின் முகப்பில் ‘பிர்சா முண்டா- கொங்காடை’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறிய வீட்டினுள் நுழைந்து பார்த்தால் முன் அறை சுவரிலேயே தலைப்பாகை கட்டி, வெற்றுடம்புடன் வில்லும், அம்பும் ஏந்தியபடி ஓர் இளைஞனின் படம். அதன் கீழேயும் பிர்சா முண்டா என எழுதப்பட்டிருக்கிறது.

பிர்சா முண்டா, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பண்ணை முதலாளிகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்த பழங்குடி இன மக்களுக்காகப் போராடியவர். அன்றைக்கு அவர் இருந்து இயங்கிய பகுதி, வங்காள மாகாணம். இப்போது ஜார்கண்ட். தம் இன மக்களுக்காகப் போராடி இளம் வயதிலேயே உயிர்த் தியாகம் செய்த சுத்த வீரர். அவரது புகழைச் சொல்லும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்றும் கூட ஜார்கண்ட் பகுதி பழங்குடி மக்களிடையே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது.

அங்கே இருப்பது புரிந்துகொள்ளக் கூடியது. தமிழ் நாட்டுக்கு பிர்சா முண்டா எப்படி வந்தார்? கொங்காடை கிராமத்துக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!