இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...
வணக்கம்
உடல் எடை ஏற்றம் என்பது இன்று உலகம் முழுதும் பெரும்பாலானவர்கள் கவலை கொள்ளும் பிரச்னை. உட்கார்ந்து செய்யும் வேலைகள் பெருகிவிட்டதே முதன்மைக் காரணம். உழைப்பைத் தர இயலாதபோது உடல் எடை கூடிப் போகிறது. உபரியாகச் சில நோய்கள், சிகிச்சைகள்.
இந்த இதழின் சிறப்புப் பகுதி அதைத்தான் ஆராய்கிறது. பல்வேறு விதமான டயட் முறைகள் இதில் விவாதிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான - ஆனால் யாரும் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க முடியாத பேலியோ டயட் குறித்து நியாண்டர் செல்வன் விரிவாக விளக்கி இருக்கிறார். மாரத்தான் வீரர் பூவராகன், ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவோர் சாப்பிட வேண்டிய விதத்தை விளக்குகிறார். பெண்களுக்கான எடைக் குறைப்பு டயட், மன அழுத்தத்தால் அதிகம் உண்போர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதிலிருந்து மீளும் வழி என்று இப்பகுதியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் உபயோகமானவை.
இது ஜனாதிபதிகளும் பிரதமர்களும் மாறும் காலம். இலங்கையின் புதிய ஜனாதிபதி ஆகியிருக்கும் பழைய ரணில் விக்கிரமசிங்கே எதிர்கொள்ள வேண்டிய சவால்களை ஸஃபார் அஹ்மத் விளக்குகிறார். அவல நகைச்சுவை என்றால் என்னவென்று மிகத் துல்லியமாகப் புரிய வைக்கும் கட்டுரை அது. இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவை பிரபு பாலா அறிமுகம் செய்கிறார். பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்வுக்கான போட்டிக் களத்தில் நிற்கும் இருவரை ஜெயரூபலிங்கம் படம் வரைந்து பாகம் குறிக்கிறார்.
பிரிட்டனிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த வாரம் திடீரென்று வெப்ப நிலை உயர்ந்து, செய்திகளில் பரபரப்பானதை அறிந்திருப்பீர்கள். அது குறித்த விளக்கமான கட்டுரையும், சொல்லி வைத்தாற்போல அதே விஷயத்தைக் கதறக் கதறக் கிண்டலடிக்கும் சிவசங்கரி வசந்தின் நகைச்சுவைக் கட்டுரையும் ஒருசேரப் பிரசுரமாகியிருக்கின்றன. இரண்டையும் அடுத்தடுத்துப் படித்தால் குறைந்தபட்சம் ஒரு புன்னகை, அதிகபட்சம் ஒரு வெடிச் சிரிப்பு நிச்சயம்.
உலக அளவில் முக்கியத்துவம் பெறும் விவகாரங்களைக் குறித்துத் தமிழில் எளிமையாகவும் தொடர்ச்சியாகவும் எழுதும் ஒரே பத்திரிகை மெட்ராஸ் பேப்பர் மட்டுமே. நீங்கள் ரசிக்கும் இப்பத்திரிகையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி சந்தா செலுத்தச் சொல்லுங்கள். தமிழ் இதழியலில் இது ஒரு புதிய முயற்சி என்பதைப் புரியவையுங்கள்.
ஏனெனில், இது உங்கள் பத்திரிகை.
சிறப்புப் பகுதி: டயட்
சுற்றும் பூமி
அறுசுவை
தொடரும்
51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...
கடின உழைப்பாளி நிறைய எதிர்பார்ப்புகளோடு இரண்டரை மணி நேரத்துக்கும் மேலான நீண்ட பேருந்துப் பயணம் செய்தார் ஒரு இளைஞர். போன இடத்தில் மற்றவர்களைப் பார்த்தால் கோட்டும் சூட்டும் டையுமாக இருக்கிறார்கள். பயணத்தினால் வந்த களைப்புடன் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கும் தன் கோலத்தைப் பார்க்க அவருக்கே கஷ்டமாக இருந்தது...
26. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (16.09.1881 – 24.10.1953) தமிழினம் என்பதற்கு உலகம் அறிந்த ஒரு உரைகல் வாக்கியம் உண்டு. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதுதான் அது. உலகம் முழுக்கப் புகழ்பெற்ற அந்த வாக்கியத்தின் பொருள், எந்த ஊரும் எந்தன் ஊரே, உலகத்தில் வாழும் எந்த ஒரு மானுடரும்...
இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? இறப்பினைக் கண்டு அஞ்சாதவர் இந்த உலகில் இருக்க முடியாது. ஒரு சில பேர் இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலானோர்க்கு இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கை நரகம்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கக்கூடிய இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? ஒரு நாள், இரு நாள் இல்லை… பல...
52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...