Home » Home 29-03-31

வணக்கம்

கோவிட் பரவல் அதிகரித்திருப்பதாகச் செய்தி வருகிறது. மீண்டும் முகக் கவசம் அணியச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவல்லாமல் இன்னொரு புதிய ரக வைரஸ் தாக்குதலும் ஆரம்பமாகியிருக்கிறது. யாரைக் கேட்டாலும் இருமல், தலைவலி, காய்ச்சல். மருந்துக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது.

உலகெங்கும் கிருமிகளால் மனிதர்கள் அவதியுறுவதும் மீள்வதும் உலகு தோன்றிய நாளாக உள்ளதுதான். நம் தலைமுறை அதற்கு இன்னொரு சாட்சியாகிறது, அவ்வளவுதான். 2020ம் ஆண்டு பேயாட்டம் ஆடத் தொடங்கிய கோவிட் 19, அடுத்த இரண்டாண்டுகளில் அழித்துச் சென்றவை அநேகம். தொழில் முடங்கியது. வர்த்தகம் விழுந்தது. பணப் புழக்கம் குறைந்தது. பலருக்கு வேலை இல்லாமல் போனது. இழுத்து மூடப்பட்ட பல நிறுவனங்கள் இன்றுவரை திறக்கப்படவேயில்லை. பெரிய நிறுவனங்களில் கட்டாய ஆட்குறைப்பு செய்தார்கள். வேலையில் இருந்தவர்கள் எப்படியாவது அதைத் தக்கவைத்துக்கொள்ள வீட்டிலிருந்தே இரவு பகலாகப் பாடுபட்டார்கள். இங்கே அங்கே என்றில்லை. எங்கும் இதுதான். எல்லா இடங்களிலும் இதுதான். சென்ற வருடம்தான் ஓரளவு அதிலிருந்து மீண்டோம். மீண்டும் இப்போது அதே அச்சுறுத்தல்.

எச்சரிக்கையாக இருங்கள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். அதற்கு ஒரு பொருளே இல்லாமல் ஆகிவிட்டது. உண்மையில், எச்சரிக்கை உணர்வு என்பது இனி நம் இயல்பாக மாறவேண்டும் போல இருக்கிறது. திரும்பத் திரும்ப முகக் கவசம், திரும்பத் திரும்ப சோப்புப் போட்டுக் கை கழுவுதல், திரும்பத் திரும்ப சானிடைசர். கூட்டம் சேரும் இடத்திலிருந்து விலகி இருத்தல்.

திரையரங்குக்குப் போகாமல் இருக்கலாம். ஆனால் பேருந்து, ரயில் பயணங்களை அன்றாடம் தவிர்க்க முடியுமா? டீக்கடையில் நின்று அரட்டை அடிக்காமல் இருக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியரிடம் பேசாதிருக்க முடியுமா?

எனவே நாம் செய்யக்கூடியது, தவிர்க்க முடியாதவற்றை மட்டும் செய்வது எனக் கொள்வதுதான். மேற்படி எச்சரிக்கை உணர்வை அந்தத் தருணங்களில் கைக்கொள்ளலாம். இப்போது வந்திருப்பது அல்லது இனி வரப் போவது பழைய கோவிட் அளவுக்கு வீரியம் உள்ளதாக இராது என்று நம்புவது பேதைமை. அப்படி இருக்கக் கூடாது என்று விரும்பலாமே தவிர, அலட்சியப்படுத்துவது ஆபத்தில்தான் முடியும்.

அலுவலகங்கள், பள்ளி-கல்லூரி நிர்வாகங்கள் முகக் கவசத்தை இப்போதே வலியுறுத்தத் தொடங்குவது நல்லது. ஒன்றும் இல்லாவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ஒன்றும் இருக்காது என்று நாமாக நினைத்துக்கொள்வது சரியல்ல. மருத்துவமனைகளில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கினால்தான் அரசுத் தரப்பிலிருந்து எச்சரிக்கை வரும். அதைப் பெருகவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாமே என்பதால்தான் இந்த முன்னறிவிப்பு.

பாதுகாப்பாக இருப்போம். எச்சரிக்கையாக இருப்போம்.

உலகைச் சுற்றி

நம்மைச் சுற்றி

நம் குரல்

என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...

இந்தியா

பிரதமரின் பிங்க் நோட்டுப் புரட்சி

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் வைத்த சிப்ஸ் நமுத்துப் போனதால் திரும்பப்...

நம் குரல்

சாராயச் சாவுகளும் உதவாத தீர்வுகளும்

எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும்...

நுட்பம்

கூகுள் ஜீபூம்பா

கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை...

மேலும் ரசிக்க

சமூகம்

நாய் வளர்க்க எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?

தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவரும் துறைகளின் பட்டியலில் சத்தமேயில்லாமல் சேர்ந்திருக்கிறது பெட் கேர் இண்டஸ்ட்ரி. அதாவது செல்லப்...

சமூகம்

காதலைக் கலைத்துப் போடுவது எப்படி?

96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம்...

சமூகம்

ஒரு பேரழிவின் மிச்சங்கள்

அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக்...

நகைச்சுவை

நடிக்க வா!

அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி...

  • தொடரும்

    error: Content is protected !!