Home » Home 28-09-22

வணக்கம்

எது எல்லோருக்கும் பிடிக்குமோ, அது இந்த வார சிறப்புப் பகுதி ஆகியிருக்கிறது.

பணத்தைப் பொறுத்தவரை மூன்றே விஷயம்தான். சம்பாதிப்பது. சேமிப்பது. செலவு செய்வது. இந்த மூன்று கலைகளையும் குறித்து மூன்று வல்லுநர்கள் (சோம. வள்ளியப்பன், நியாண்டர் செல்வன், மௌலி) இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள். இவை தவிர FIRE குறித்த மிக முக்கியமானதொரு கட்டுரையும் இடம் பெறுகிறது.

இன்றைய தலைமுறை முப்பத்தைந்து வயதில் ‘செட்டில்’ ஆகிவிட வேண்டும் என்று விரும்புகிறது. அதற்குமேல் யாருக்கும் கடமைப்படாமல், தன் விருப்பத்துக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறது. தவறில்லை. ஆனால் திட்டமிட்ட, முறைப்படுத்தப்பட்ட சேமிப்பு மற்றும் முதலீடுகளைச் செய்துகொண்டு கனவை நனவாக்க முடியும். அதற்கான வழிமுறைகளை நிதி ஆலோசகர் சதீஷ்குமார் விவரிக்கிறார்.

சம்பாதிப்பது என்கிறோம். சேமிப்பது என்கிறோம். திட்டமிடல் என்கிறோம். ஆனால் இவை அனைத்துமே அர்த்தமற்றுப் போய்விட்ட இலங்கையின் இன்றைய பொருளாதாரச் சூழலைச் சுட்டி, முன்னொரு காலத்தில் அனுபவிக்க வாய்த்த எளிய, இனிய, மகிழ்ச்சியான வாழ்வை நினைவுகூரும் ரும்மானின் கட்டுரை கண் கலங்க வைக்கும்.

அவ்வண்ணமே பால கணேஷ் எழுதியுள்ள சினிமாப் பணம் குறித்த கட்டுரையும், அறிவனின் பணம் வந்த பாதையும் உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.

சென்ற வாரம் வட கொரியாவின் மீது அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை வைத்தது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கு அத்தேசம் ஆயுத உதவி செய்கிறது என்பது அக்குற்றச்சாட்டு. வட கொரியா என்ன செய்யும் என்று ஆராயப் புகுமுன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, அத்தேசம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது. பன்னெடுங்காலமாக ராணுவம் தவிர வேறு எதிலுமே வளராமல், இருபத்தாறு மில்லியன் மக்களைக் கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் கிம் என்கிற ஒரு தனி நபரின் ‘நிறுவன’மாக உள்ள தேசத்தில் வாழ்க்கை எப்பேர்ப்பட்ட அவலமாக உள்ளது என்பதை விரிவாக அறிமுகப்படுத்துகிறார் ஸஃபார் அஹ்மத்.

இந்தக் கட்டுரையைப் படித்து அதன் உக்கிரத்தைத் தணித்துக்கொள்ள சிவசங்கரியின் ‘ஓம் க்ரீம் ஓடிடியாய நமஹ’ உங்களுக்கு உதவும். நேச்சுரல்ஸ் நிறுவனர்களின் வெற்றிக் கதை, குறிப்பெடுக்க உதவும் செயலிகள் குறித்த வெங்கடரங்கனின் கட்டுரை, கத்தார் உலகக் கோப்பை கால்பந்துத் திருவிழாவுக்குத் தயாராவது பற்றிய நசீமாவின் கட்டுரை என்று இந்த இதழில் வாசிக்கவும் நேசிக்கவும் நிறையவே உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இன்னும் சிறந்த கட்டுரைகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • சிறப்புப் பகுதி: பணம்

    ஊரும் உலகும்

    நம் குரல்

    விரும்பாத ஒன்றும் இல்லாத ஒன்றும்

    பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப்...

    உலகம்

    மீண்டும் ஐ.எஸ்: ரஷ்யாவைக் குறி வைத்தது எதனால்?

    “எல்லோரும் மண்டியிடுங்கள். இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என யாரும் மிரட்டவில்லை. துப்பாக்கியை மேலே உயர்த்திச் சுடவுமில்லை. அரங்கிற்குள்...

    உலகம்

    டிரம்ப் விவகாரம்: விடாது கருப்பு

    வீடு, நிறுவனம், மதம் ஆலயம் அல்லது அரசியல் கட்சி எதுவானாலும் சரி…. பொருளாதாரமும் அதைச் சார்ந்த முடிவுகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவோ...

    நாலு விஷயம்

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 93

    93. வேட்கை அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான். பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்‌ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம்...

    Read More
    திறக்க முடியாத கோட்டை தொடரும்

    திறக்க முடியாத கோட்டை – 24

    24 – வாரிசு இல்லாத வல்லரசு 20-பிப்-2014. சுதந்திர சதுக்கம், கீவ், உக்ரைன். குறி தவறாமல் சுடும் ஸ்நைப்பர்கள் சதுக்கத்தைச் சுற்றி வளைத்தனர். முக்கியப் போராளிகள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்று நேரத்தில் எண்ணிக்கை இருமடங்கானது. ஆம்புலன்ஸ்களிலேயே பரலோகம் சென்றடைந்த ஆன்மாக்கள் ‘பரலோக...

    Read More
    தொடரும் ப்ரோ

    ப்ரோ – 24

    “நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 97

    97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...

    Read More
    சைபர் க்ரைம் தொடரும்

    கத்தியின்றி ரத்தமின்றி – 18

    நீரின்றி அமையாது உலகு அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள். மடியில் அவனது லேப்டாப். தனது ப்ரசன்டேஷனை மீண்டுமொருமுறை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் திவாகர். எல்லாமும் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. கண்களை...

    Read More
    error: Content is protected !!