Home » Home 26-10-22

வணக்கம்

‘விளக்கு’ விருது பெற்றிருக்கும் இராசேந்திர சோழன் பற்றிய பகுதியே இந்த இதழின் முதன்மைச் சிறப்புப் பகுதியாகிறது. தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான இராசோவின் சிறந்த கதைகளுள் ஒன்றான ‘சாவி’ இந்த இதழில் மீள் பிரசுரமாகிறது. அச்சிறுகதையின் நுட்பங்களை விவரித்துச் சிலாகிக்கும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரை, ஓர் இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று அழகாகக் கற்றுத் தருகிறது. இராசேந்திர சோழனுடன் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பழகியவரும், அவரோடு இணைந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டவருமான மாயவன் தமது நண்பரைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இராசேந்திர சோழன் என்கிற ஆளுமையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள அது உதவும்.

பருவ மழைக்காலம் தொடங்கும் நேரம் இது. இம்முறை மழைக்காலம் எப்படி இருக்கும் என்று ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் விவரிக்கிறார். மழைக் காலத்தில் வாகனங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விளக்கும் பாபுராஜின் கட்டுரை அனைவருக்கும் பயன் தரக் கூடியது. இலங்கை-கண்டியில் தமது இளமைக் காலத்தைக் கழித்த தர்ஷனா கார்த்திகேயன், தனது மழைக்கால நினைவுகளைக் குடையென விரித்திருக்கிறார். இக்கட்டுரை மிக நிச்சயமாக உங்கள் ரசனைக்கு விருந்து.

நாற்பத்தைந்து நாளில் பதவி விலகியிருக்கும் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் விட்டுச் சென்றிருக்கும் செய்தி என்ன? புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் ரிஷி சுனக் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன? ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, மிக நெருக்கடியான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கும் பிரிட்டனின் அரசியல் நிலைமையை அலசி ஆராய்கிறது.

இலங்கைப் பொருளாதாரம் இன்னும், இன்னும் கீழிறங்கிச் சென்றுகொண்டிருக்கும் அவலத்தைத் தோலுரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, திருப்பூர் பின்னலாடைத் தொழில் நலிவுற்றுக்கொண்டிருப்பதன் பின்னணியை விவரிக்கும் அ. பாண்டியராஜனின் கட்டுரை, அமெரிக்க-சீன உறவு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும் சூழலின் பின்னணியை அலசும் பத்மா அர்விந்தின் கட்டுரை - இம்மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடியும். வேறு வேறு களங்கள்தாம்; வேறு வேறு பிரச்னைகள்தாம்; பரிமாணங்களும் தொடர்பற்றவைதாம். ஆயினும் இவற்றின் குவி மையம் ஒன்றே போலத் தோன்றும் வினோதத்தைக் கவனியுங்கள்.

தீபாவளியைக் கொண்டாட நாம் தயாராகிக்கொண்டிருந்த நேரம் இரண்டு தமிழ் எழுத்தாளர்களின் மறைவுச் செய்தி நம்மை வருந்தச் செய்தது. ஈழத்தின் முன்னோடி படைப்பாளுமைகளுள் ஒருவரான தெளிவத்தை ஜோசப் மற்றும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இடதுசாரிப் படைப்பாளியான பா. செயப்பிரகாசம். இருவருக்கும் நமது அஞ்சலி. இந்த இதழில் தெளிவத்தை ஜோசப்பின் ஆளுமையைத் துல்லியமாக எடுத்துக் காட்டும் நர்மியின் கட்டுரை இடம்பெறுகிறது.

மெட்ராஸ் பேப்பர் உங்கள் பத்திரிகை. உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களை சந்தாதாரர்களாக்குங்கள். மேலும் பல சுவாரசியமான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

விளக்கு விருது: இராசேந்திர சோழன்

சிறப்புப் பகுதி: மழைக்காலம்

முகங்கள்

இது விடுமுறை இல்லா வேலை

நிறையப் பேருக்குக் காலையில் செய்தித்தாள் படித்துக்கொண்டே காபி குடித்தால்தான் திருப்தி இருக்கும். காபி குடிப்பது அல்லது செய்தித்தாள் வாசிப்பது ஏதாவது...

நம்மைச் சுற்றி

உலகம்

ஒரு தேசம், ஒரு ராக்கெட், ஓராயிரம் கவலைகள்

செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர...

உலகம்

இஸ்ரேல்: என்றென்றும் கலவரமே!

வெளிநாட்டவர் ஒருவருக்கு நமது சாதியக் கட்டமைப்பைப் புரியவைப்பது எந்தளவுக்குச் சிரமமானதோ அதைவிடச் சிரமமானது இஸ்ரேலில் இருக்கும் கட்சிகளையும்...

புத்தகக் காட்சி

வாசிக்கும் சமூகம் ஏன் யோசிப்பதில்லை?

கொழும்பு சிங்களப் புத்தகக் காட்சி குறித்த நேரடி ரிப்போர்ட். தமிழ் வாசகர்களுக்குச் சில புதிய திறப்புகளைத் தருகிற கட்டுரை. “மாக்சிம் கார்க்கியின்...

உலகம் கோவிட் 19

கோவிட்: வயது 3

நாமனைவரும் மறந்தேவிட்ட கோவிட் இன்னமும்கூடச் சில இடங்களில் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. ஆமாம் – மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர்...

அறுசுவை

நம் குரல்

நம் பிரதமர், நமது பெருமை!

ஒவ்வோர் இந்தியனும் நமது பிரதமரை நினைந்து நினைந்து நெஞ்சில் கழிபேருவகை கொள்ளலாம். ஆம்; உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கிடைக்காத ஓர் அபூர்வ...

நுட்பம்

தரமான இலவசங்கள்

இன்று இணையத்தில் கிடைக்காதது என்று எதுவுமேயில்லை. ஆனால் இலவசம் என்கிற பெயரில் குப்பைகள்தான் அதிகம். மேலே படிந்துள்ளப் புழுதியை நீக்கிவிட்டுப் பார்க்க...

 • தொடரும்

  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை – 26

  26. அமிர்தசரஸ் சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் நகரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டுக்குத் தலைமை தாங்க மோதிலால் நேரு வந்த அதே சமயத்தில், அங்கே நடக்கவிருந்த முஸ்லிம் லீக் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க அஜ்மல்கான் வந்திருந்தார். மோதிலால் நேருவும், அஜ்மல்கானும் ஒன்றாகப் பொற்கோவிலுக்குச் சென்று...

  Read More
  தொடரும் நாவல்

  ஆபீஸ் – 26

  26 விதி ஹலோ என்ன வெள்ளைப் பேப்பரை எல்லாம் கடிதம் என்று அனுப்ப ஆரம்பித்துவிட்டீர்கள் என்று, அனுப்புநர் முகவரியில் அவன் அடித்திருந்த முத்திரையைப் பார்த்துவிட்டு,  ஏசி பிரஸாதின் நேரடி லைனிற்கு வந்திருக்கிறார் சாஸ்திரி பவனில் இருக்கிற அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி.  வெள்ளைத் தாள் வந்ததை அவர்...

  Read More
  error: Content is protected !!