கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...
வணக்கம்
இந்த இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் விரிவான நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற கையோடு, நகரின் பதினெட்டு நூலகங்களில் ஒரே நாள்-ஒரே நேரம் உலகப் புத்தக தின விழாவைக் கொண்டாடக் காரணமாக இருந்தவர் அவர். பல்லாண்டு காலமாக உறக்கத்தில் இருந்த நூலகத் துறை இப்போது விழித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் உற்சாகமாகச் செயல்படவும் தொடங்கியுள்ளது. இந்தப் பேட்டியில் மனுஷ், நூலக இயக்கம் சார்ந்த தமது திட்டங்களை விரிவாக விளக்கியிருக்கிறார்.
தொழில்நுட்பம் சார்ந்த நான்கு முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கூகுள் ஷீட்ஸின் புதிய வசதிகள் குறித்து வெங்கட் எழுதியிருக்கிறார். சாட் ஜிபிடி குறித்த அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் விதமானதொரு கட்டுரையை ஜெயந்த் சண்முகம் எழுதியிருக்கிறார். ஆழி செந்தில்நாதனின் ஐலேசா குறித்து கோகிலா எழுதியிருக்கிறார். சென்ற வாரம் இணையமெங்கும் பேசுபொருளாக இருந்த ட்விட்டர் ப்ளூ குறித்துக் குப்புசாமி எழுதியிருக்கிறார்.
சூடான் கொதிநிலையைத் தாண்டி அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. ராணுவத்துக்குள் மூண்ட அதிகாரப் போட்டி, உருண்டு திரண்டு இன்று மொத்த தேசத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிறது. சூடானில் என்ன நடக்கிறது என்று விரிவாக விவரிக்கிறார் வினுலா.
சூடானிலாவது ராணுவத்துக்குள் கலவரம். இந்திய மக்கள் தொகை, சீனாவின் எண்ணிக்கையைத் தாண்டி உலக அளவில் முதலிடத்தைத் தொட்டு இங்கே நமக்களிக்கும் கலவரம் கொஞ்சநஞ்சமல்ல. கல்வி, வேலைவாய்ப்புகள் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னேற்றம் இன்னும் துரிதமாக வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது பத்மா அர்விந்தின் கட்டுரை.
வெனிசூலாவில், கல்வி கற்பதற்காக அபாயகரமான கானகத்தின் வழியே எல்லை தாண்டி கொலம்பியாவுக்குள் நுழையும் சிறுவர்கள் குறித்த கோகிலாவின் கட்டுரை, ஆயிரக் கணக்கான தமிழ் திரைப்படங்கள் பாதியில் நின்று போவதன் அடிப்படையை விளக்கும் தயாரிப்பாளர் ராம்ஜியின் பேட்டி, உக்ரைன் ராணுவ வீரர்கள் போர்க்களத்துக்குச் செல்லும் முன்னர் விந்து வங்கியில் தமது உயிரணுக்களைச் சேகரித்து வைத்துவிட்டுச் செல்வது குறித்த கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் ஊன்றி வாசிக்க நிறைய உள்ளன.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
உலகைச் சுற்றி
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக...
நேர்காணல்: மனுஷ்யபுத்திரன்
முதல் உலகப் போர் முடிவடைந்து, மேற்கு நாடுகளனைத்தும் போரின் தாக்கத்தில் இருந்து மீளப் பாடுபட்டுக்கொண்டிருந்த சமயம். 1922ம் ஆண்டு சில அமெரிக்க எழுத்தாளர்கள் ஒன்று கூடினார்கள். (வில்லா கேதர், யூஜின் ஓ’நீல், ராபர்ட் ஃப்ரோஸ்ட், எலன் கிளாஸ்கோ, எட்வின் ஆர்லிங்டன் ராபின்சன், ராபர்ட் பெஞ்ச்லி.) சும்மா...
நுட்ப பஜார்
“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...
உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு...
“யோக்கியனுக்கு இருட்டுல என்னடா வேல?” என்றொரு வடிவேலு பட வசனம். நாமனைவருமே பார்த்து ரசித்திருப்போம். அதற்கு இணையானது தான், “நல்லவனுக்கு எதுக்குடா...
நம்மைச் சுற்றி
ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...
ஹமிதா பானு என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மல்யுத்த வீராங்கனை என்று சொன்னாலாவது நினைவுக்கு வருகிறாரா? அநேகமாக இராது. இந்த தேசம்...
அடிக் அஹமதும் அவர் சகோதரர் அஷ்ரஃபும் காவல் துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் சென்று கொண்டிருந்தனர். கஸ்டடியில் இருப்பவர்களுக்குச்...
தொடரும்
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...
27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...