Home » Home 25-12-2023

வணக்கம்

ஒரு வருடம் நிறைவடைந்து இன்னொரு வருடம் பிறக்கும்போது நிறைய எதிர்பார்க்கிறோம். திட்டமிடுகிறோம். குழந்தைகள் தமது பிறந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருந்து கொண்டாடிக் களிப்பது போலப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடிக் கடக்கிறோம். ஆனால் மறுநாள் முதல் முந்தைய ஆண்டின் இறுதி தின நிலவரத்தைத்தான் திரும்பவும் ஒரு போர்வையாக எடுத்துப் போர்த்திக்கொண்டு பிழைப்பைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எதுவும் மாறுவதில்லை. அற்புதங்கள் மறைபொருள்களாகவே தொடர்ந்து நீடிக்கின்றன.

இது மிகையல்ல. இந்த இதழில் இடம்பெற்றுள்ள பத்மா அர்விந்தின் முடியாத யுத்தம் (உக்ரைன் போரினைப் பற்றியது), ரும்மானின் தப்பிச் செல்லும் தலைமுறை (இலங்கையின் இளைய தலைமுறை கொத்துக் கொத்தாக வேறு தேசங்களுக்கு இடம் பெயர்வது தொடர்பானது), நஸீமா எழுதியிருக்கும் குரங்கு கையில் ஏகே 47 (பாலஸ்தீனியர்களின் பிரச்னை சார்ந்தது), ஸஃபார் அஹ்மதின் ட்யூனிசியா: மீண்டும் கொதிநிலை (துனிசிய அரசியல் குழப்பம்) என எந்தக் கட்டுரையை வாசித்தாலும் நீங்கள் இதனை உணரலாம். நாம் பிரச்னைகளுடன் வாழப் பழக வேண்டிய தலைமுறை. இதில் உலகப் பிரச்னை, உள்ளூர்ப் பிரச்னை என்ற பாகுபாடே இல்லை. எங்கும் தமிழர்கள் இருப்பதால் எல்லா மண்ணின் சிக்கல்களும் ஏதோ ஒரு வகையில் நம்மைத் தொடாதிருப்பதில்லை.

சென்னை புத்தகக் காட்சி - சர்வதேசப் புத்தகக் காட்சி இரண்டும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றன. பபாசி நடத்தும் சென்னை புத்தகக் காட்சியில் எப்போதும் இருக்கும் இடர்பாடுகள் இம்முறையும் இருந்தன என்பதைத் தவிர புதிய பிரச்னைகள் ஏதுமில்லை. ஆனால் புத்தகக் காட்சிக்கு வந்த ஒவ்வொருவருக்கும் ஓர் ஆதங்கம் இருந்தது. அதே வளாகத்தில்தான் தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்திய சர்வதேசப் புத்தகக் காட்சியும் நடைபெற்றது. அதன் தரமும் உயரிய நோக்கமும் சரியான விளைவுகளும் பபாசியைச் சிறிதளவாவது சிந்திக்க வைக்காதா என்பதே அது. பணத்துக்கோ ஆள் பலத்துக்கோ சற்றும் குறைவற்ற அமைப்பு அது. இருந்தாலும் விடாப்பிடியாக ஒரு மொண்ணைத்தனத்தைத் தனது பிரத்தியேக அடையாளமாக வைத்திருக்கிறது. பொறுத்துத் தான் தீர வேண்டும். இந்த இதழில் புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த சில விஷயங்களைக் குறித்துச் சில பதிப்பாளர்களும் படைப்பாளிகளும் வாசகர்களும் பேசியிருக்கிறார்கள் (நினைவில் வாழும் திருவிழா).

இந்த இதழில் இன்னும் இரண்டு திருவிழாக்களைக் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. மதுரை தெப்பத் திருவிழா நடக்கவிருக்கிறது. பாபுராஜ் அது குறித்து எழுதியிருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தொகுதி மக்களின் மனநிலை குறித்து பிரபு பாலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

முறையான முதலீட்டுத் திட்டம் குறித்த சிவசங்கரியின் கட்டுரை, நர்மியின் பயணக் கட்டுரை, ஐபோனில் இருந்து ஆண்டிராய்டுக்கு மாற நினைப்பவர்களுக்குப் பேருதவி புரியும் விதமாக வெங்கடரங்கன் எழுதியிருக்கும் நுட்பக் கட்டுரை என்று இந்த இதழ் வழக்கத்தினும் சிறிது கனமானதே.

அனைத்துக்கும் சிகரம், ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்பில் ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸாவின் சிறுகதை ‘நதியின் மூன்றாவது கரை’. கதையைப் படித்துவிட்டு விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்கும் புனைவு என்னும் புதிர் கட்டுரையை நிதானமாகப் படியுங்கள். ஓர் இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று அது அணு அணுவாகச் சொல்லித்தரும்.

மேலும் சிறப்பான படைப்புகளுடன் மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களைச் சந்தாதாரர் ஆக்குங்கள். ஏனெனில், இது உங்கள் பத்திரிகை.

 • ஊருலகம்

  உலகம்

  ஆப்கன் குழந்தைகள்: எலும்பை எண்ணிப் பார்க்காதீர்கள்!

  பசியாலும் பஞ்சத்தாலும் நிலைகுலைந்த எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க தேசத்துக் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். எலும்பும்...

  இந்தியா

  பாதுகாப்பையா பணயம் வைப்பது?

  கச்சத்தீவு விவகாரம் மீண்டும் ஒரு முறை விவாதத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை அதிகம் பேசப்படாத பால்க் விரிகுடா, வாட்ஜ் பேங்க் விஷயங்களும்...

  உலகம்

  தைவான் நிலநடுக்கம்: விழுந்தாலும் நொறுங்காத தேசம்

  ஜன்னலோரம் இருந்த கைக்குழந்தைகளின் தொட்டில்களை, அறைக்கு நடுவே அவசரமாக நகர்த்துகிறார்கள். அந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டிலிருந்த எல்லாத்...

  உலகம்

  உலகெலாம் தேர்தல், உருவெலாம் போலி!

  உலகத்தில் 64 நாடுகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. சில நாடுகளில் சமீபத்தில் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 50% மேலான மக்கள்...

  உலகம்

  போரின்றி வேறில்லை

  வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் தொண்டு நிறுவனத்தின் ஏழு உறுப்பினர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டதற்கு இரண்டு அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்துள்ளது இஸ்ரேல்...

  ஆளுமை

  பேசாதே, செய்! – ஒரு சிங்கத்தின் கதை

  2004-ஆம் ஆண்டு. சோனியா பிரதமராவதற்குப் பலத்த எதிர்ப்பு அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்திருந்தது. அப்போது சோனியா இரண்டு விதமான மனநிலையிலிருந்தார்...

  சுவை புதிது

  நம் குரல்

  நூறைத் தொடும் நேரம்

  மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல...

  தமிழ்நாடு

  அரணையூர் ‘அதிபர்’: ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

  தமிழகத்தில் 2016-லிருந்து தேர்தல் அரசியலில் இறங்கிய நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து கடந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 7 சதவீத வாக்கு...

  சுற்றுலா

  சுற்றிப் பார், சொக்கிப் போவாய்!

  பாபிலோனின் பழைய தொங்கும் தோட்டங்கள், சுல்தான் நெபுகாத் நெசர் வகையறாக்களைச் சிறிது நினைவுகூர்ந்து, நகர்த்தி வையுங்கள். உலகம் உருண்டை. காலம் உருண்டை...

  தமிழ்நாடு

  நட்சத்திரத் தொகுதிகளில் நடக்கப் போவதென்ன?

  ஒவ்வொரு கட்சியும் அவரவருக்கு ஏற்ற வழியில் மக்களின் மனங்களில் தங்களது கருத்துகளைத் திணித்துக்கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு இன்னும் ஒன்பது...

 • தொடரும்

  இலக்கியம் நாவல்

  ஆபீஸ் – 95

  95 எட்டடிக் குச்சு ‘என்ன உன் கதை எதாவது வந்துருக்கா’ என்று கேட்டுக்கொண்டே டாய்லெட்டில் இருந்து, கைக்குட்டையில் ஈரக் கைகளைத் துடைத்துக்கொண்டபடி ரேஞ்சுக்குப் போனார் மோகன். டேபிள் மீது இருந்த ஞானரதத்தை எடுத்துக் காட்டி, ‘இதுவா. பழசு. ரெண்டு மூணு மாசம் முன்ன வந்தது’ என்றபடி போய்...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை – 99

  99. படேல் ராஜினாமா “ஷேக் அப்துல்லா கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காஷ்மீர் மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர்; அவருக்கும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காஷ்மீர் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானுக்கு முஸ்லிம்...

  Read More
  சைபர் க்ரைம் தொடரும்

  கத்தியின்றி ரத்தமின்றி – 20

  ஒன்று ஒன்பது மூன்று பூஜ்ஜியம் பரத்பூர், மதுரா, நூஹ், த்யோகர், ஜம்தாரா, குருக்ராம், அல்வார், பொக்காரோ, கர்மாடண்ட் மற்றும் கிரிதிஹ், இவையாவும் வடஇந்தியச் சுற்றுலாத் தலங்கள் என்றெண்ணி விடாதீர்கள். இந்தியாவெங்கும் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் பெரும்பகுதி இந்தப் பத்து இடங்களில் ஏதோ ஒன்றிலிருந்து...

  Read More
  error: Content is protected !!