Home » Home 23-11-2022

வணக்கம்

தினமும் நம் வீடுகளுக்குப் பால் பாக்கெட் போடுகிறவர்கள், பேப்பர் போடுகிறவர்கள், செயலியில் ஆர்டர் செய்தால் வாசலில் கொண்டு வந்து உணவு தந்துவிட்டுப் போகிறவர்கள் - இவர்களையெல்லாம் என்றைக்காவது நாம் நிறுத்தி முகம் பார்த்திருக்கிறோமா? அவர்களது பெயர் தெரியுமா நமக்கு? ஆனால் நம் பொழுதைப் போக்க உலாவும் ஃபேஸ்புக்குக்கு நம் ஜாதகத்தையே தருகிறோம். நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் பின் தொடர்ந்து, நம் விருப்பங்களைத் தெரிந்துகொண்டு விளம்பரங்கள் மூலம் அது நம்மைச் செலவு செய்யச் சுண்டி இழுக்கிறது. நமது அந்தரங்கத் தகவல்கள் பலவற்றை எடுத்து யார் யாருக்கோ விற்றுக் காசாக்குகிறது. நவீன வாழ்வில் நாம் பெறுவதும் இழப்பதும் பலதரப்பட்டவை. இத்தகைய முரண்களை இனி நம்மால் தவிர்க்கவே முடியாது. இவற்றோடுதான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் எப்படி வாழ்கிறோம் என்று அவ்வப்போது கணப் பொழுது நின்று எண்ணிப் பார்க்கலாம் அல்லவா? இந்த இதழின் முகமற்றவர்கள் பகுதி அதைத்தான் செய்கிறது.

பன்னெடுங்காலமாக இஸ்ரேலின் பிரதமர் என்றால் பெஞ்சமின் நெதன்யாஹுதான். உலகறிந்த இஸ்ரேலியத் தலைவர். இப்போதைய தேர்தலுக்குப் பிறகும் அவரேதான் வந்திருக்கிறார். அதே அடாவடிதான், அதே கெடுபிடிகள்தாம். இம்முறை கூட்டு வைத்துக் குழப்பவிருக்கிறார் என்பதுதான் விசேடம். ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, இஸ்ரேலியப் பொதுத் தேர்தல் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகிறது.

சென்ற இதழின் புத்தகக் காட்சி சிறப்புப் பக்கங்களை வரவேற்றுக் கொண்டாடிய வாசகர்கள் பலர். முன்பே அறிவித்தபடி புத்தகக் காட்சி சிறப்புக் கட்டுரைகள் ஜனவரி வரை அடிக்கடி வரும். இந்த இதழில் எதிர் வெளியீடு அனுஷின் சிறப்புப் பேட்டியும் கொழும்பு புத்தகக் காட்சி குறித்த ரும்மானின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டுமே சர்வதேசப் புத்தகச் சந்தை குறித்த தெளிவான பார்வையைத் தரவல்லவை.

தியாகராஜனின் போர்ட்டோ ரிக்கோ பயணக் கட்டுரை, நஸீமா எழுதியுள்ள எகிப்தின் அதி நூதனக் குற்றவாளி ஒருவரைப் பற்றிய கட்டுரை, மூன்றாம் உலக யுத்தமாக மாற இருந்து மயிரிழையில் தப்பித்த ரஷ்ய உக்ரைன் போரின் ஒரு குறிப்பிட்ட கட்டம் குறித்த ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, சீனாவிலும் வட கொரியாவிலும் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கும் கோவிட் 19 குறித்த பூவராகனின் எச்சரிக்கைக் கட்டுரை என்று இந்த இதழெங்கும் நீங்கள் கருத்தூன்றி வாசிக்கப் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.

வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மெட்ராஸ் பேப்பர் உங்கள் பத்திரிகை. உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள். புதிய தொடர்கள் குறித்த அறிவிப்பு இந்த இதழில் வெளியாகியுள்ளது. அடுத்த இதழிலிருந்து அவற்றை வாசித்து ரசிக்கத் தொடங்கலாம்.

  • திசை எட்டும்

    உலகம்

    ‘சரி. பிரிந்துவிடுவோம்!’

    கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...

    உலகம்

    அப்பன் வீட்டுச் சொத்து: பரவும் பங்களாதேஷ் மாணவர் புரட்சி

    இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...

    உலகம்

    யார் இங்கு மான்ஸ்டர்?

    தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...

    உலகம்

    அமெரிக்கத் தேர்தல்: துணைவர் ஜாதகம்

    அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...

    முகமற்ற மனிதர்கள்

    கதம்பம்

    நம் குரல்

    ஆதரித்தால் அள்ளிக் கொடு!

    இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 15

    அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 15

    முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...

    Read More
    error: Content is protected !!