Home » Home-20-07-2022

வணக்கம்

இந்த இதழின் சிறப்புப் பகுதி, செயலிகள். பெண்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள், அமெரிக்கப் பிரபலங்கள் பயன்படுத்தும் செயலிகள், கடன் செயலிகள், எழுத உதவும் செயலிகள், ஸ்கேனிங் செயலிகள் எனப் பல தரப்பட்ட செயலிகளைக் குறித்து இந்த இதழில் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. டயட் செயலிகளை இழுத்துப் போட்டு, கதறக் கதற நக்கலடிக்கும் சிவசங்கரி வசந்தின் கட்டுரை மனம் விட்டுச் சிரிப்பதற்கு.

சென்ற வாரம் இலங்கையில் நடைபெற்ற மக்கள் புரட்சி குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியிருந்தார். இந்த இதழில் அதன் தொடர்ச்சியாக, இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற அதிபர் கோட்டபாய ராஜபக்சவின் தப்பித்தல் முயற்சிகளை விவரித்திருக்கிறார் (உலகம் சுற்றும் வாலிபன் - புதிய காப்பி). செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள் குறித்து ராஜிக் இப்ராஹிம் எழுதியுள்ள கட்டுரையும் துபாயில் இருந்து நூற்று இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் பாலை வனத்தின் நடுவே நிகழ்ந்திருக்கும் ஒரு பசுமைப் புரட்சி குறித்து நசீமா ரசாக் எழுதியுள்ள கட்டுரையும் முக்கியமானவை.

ஜூலை 21ம் தேதி எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பிறந்த நாள். அம்மாபெரும் கலைஞனை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக பென்னேஸ்வரன் எழுதியிருக்கும் கட்டுரை இந்த இதழுக்கு வண்ணம் சேர்க்கிறது.

வரலாறு முக்கியம் பகுதியில் அறிவன் இம்முறை சிறு தெய்வ வழிபாட்டின் தோற்றத்தை விவரித்திருக்கிறார். முன் அபிப்பிராயங்கள் இல்லாமல் வாசித்தால் பல திறப்புகளைத் தரும் கட்டுரை இது.

மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழையும் அறிதலில் ஆர்வம் கொண்ட வாசகர்கள் ஒவ்வொருவருக்காகவும் பார்த்துப் பார்த்து வடிவமைக்கிறோம். இதை இன்னும் பரவலான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் எங்களோடு தோள் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்களுக்கு இதழ் பிடித்திருக்கிறதா? போதும். உங்களைப் போன்ற ஒரே ஒரு வாசகரை நீங்கள் மெட்ராஸ் பேப்பருக்கு அழைத்து வாருங்கள். சந்தாதாரர் ஆக்குங்கள். அவர் உங்கள் நண்பராக இருக்கலாம். உறவினராக இருக்கலாம். தெரிந்த யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு புதிய வாசகரும் உங்களைப் போலவே இந்தப் பத்திரிகையைத் தாங்கி நிற்கும் தூண்களுள் ஒருவர் ஆவார்.

செய்வீர்கள் அல்லவா?

சிறப்புப் பகுதி: செயலிகள்

அக்கம் பக்கம்

ருசிகரம்

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 68

    68 ஈட்டி இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று ஆயிரம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டு ஓடிய ரங்கன் துரைராஜ் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் வருத்தத்தைவிட கோபம்தான் பொங்கி...

    Read More
    வெள்ளித்திரை

    காணாமல் போன கனவுத் தொழிற்சாலை!

    சினிமாத்துறையை வைத்து எழுதிய நாவலுக்குக் ‘கனவுத் தொழிற்சாலை’ என்று பெயரிட்டார் சுஜாதா. அந்தத் தலைப்பை அவர் தருவதற்குக் கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்கு முன்பே திரைப்படத் தயாரிப்பை ஒரு தொழிற்சாலை நடத்துவதைப் போல கட்டுக்கோப்பாகவும், நேர்த்தியாகவும், ஒழுக்கமாகவும், முக்கியமாக- லாபகரமாகவும் நடத்திக்...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் – 43

    43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு  குடும்பக்  கதை – 69

    69. மீண்டும் காங்கிரஸ் தலைமை கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில்  சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார். அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன்...

    Read More
    error: Content is protected !!