Home » Home 12-10-22

வணக்கம்

கடந்து போன காலத்தின் தித்திப்புகளை நினைவில் மீட்டுக் கொண்டு வந்து திரும்ப ருசிப்பது அனைவருக்கும் பிடித்த செயல். இந்த இதழின் சிறப்புப் பகுதியான ‘அது ஒரு காலம்’, வாசிப்பின் ருசி அறிந்தவர்களுக்கு அத்தகையதொரு விருந்து. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலப் பத்திரிகை எழுத்தில் இருந்து சில சுவாரசியமான பக்கங்களை இந்த இதழில் பால கணேஷ் தந்திருக்கிறார். அந்நாளைய உரைநடை, அந்தக் காலத்து சினிமா செய்திகள், அப்போதைய நகைச்சுவை, அன்றைய ஓவியங்கள் என்று ஒவ்வொரு பிரிவிலும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார். வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் சுவாரசியம் ஒரு புறம் இருக்க, நாம் எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்க்க இது ஒரு வாய்ப்பு.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இதழில் நான்கு கட்டுரைகள் இது சார்ந்து வெளியாகியிருக்கின்றன. நோபல் பரிசு எவ்வாறு வழங்கப்படுகிறது என்று விளக்கி ஜெயரூபலிங்கம் எழுதியிருக்கிறார். மருத்துவ நோபல் பரிசு பெற்றிருக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோ எதனால் இவ்விருதுக்குத் தகுதி பெறுகிறார் என்று மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார் ராஜிக் இப்ராஹிம். அறிவியலைக்கூட இப்படியெல்லாம் இனிக்க இனிக்கச் சொல்ல முடியும் என்பது வியப்புத்தான். இலக்கியத்துக்கான விருது பெற்றிருக்கும் பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னோ குறித்து தர்ஷனா கார்த்திகேயன் விரிவான அறிமுகத்தைத் தந்திருக்கிறார். தமிழில் அவரைக் குறித்து வெளியாகும் முதல் கட்டுரை இதுதான். அப்புறம் சிவசங்கரியின் ‘நோ-பால்’. இது சிரிப்பதற்கு மட்டும்.

வட கொரியாவின் அணு ஆயுத முஸ்தீபுகள், ஏவுகணைப் பரிசோதனைகள் குறித்து அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். அமெரிக்கா எப்படி இன்னும் இந்த ஒரு தேசத்தை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது என்கிற வினா, அமெரிக்காவை நன்கறிந்த அத்தனைப் பேருக்கும் எழும். அதற்கு விடை தரும் விதமாக இந்த இதழில் (வட கொரியா, இது சரியா?) மிக விரிவானதொரு கட்டுரை எழுதியிருக்கிறார் பத்மா அர்விந்த். சர்வதேச அரசியலில் ஆர்வமுள்ள யாரும் தவறவிடக்கூடாத கட்டுரை இது.

அவ்வண்ணமே, ரணில் இலங்கை அதிபராகி நூறு நாள்கள் நெருங்குகின்றன. பொருளாதாரச் சீரழிவின் உச்சத்தைத் தொட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் தேசத்தை இடரிலிருந்து மீட்க இந்நாள்களில் அவர் என்ன செய்தார்? அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

ஸோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு குறித்த பாபுராஜின் கட்டுரை, துபாயில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் இந்து கோயில் குறித்த நசீமாவின் கட்டுரை, தமிழ் பத்திரிகைகளின் ஆதிகால வரலாற்றை சுவாரசியமாக விவரிக்கும் அறிவனின் கட்டுரை என்று இந்த இதழில் வாசிக்கவும் நேசிக்கவும் ஏராளமாக உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். நாம் இணைந்து இதனை ஒரு தரமான வாசிப்பு இயக்கமாக முன்னெடுப்போம்.

சிறப்புப் பகுதி: அது ஒரு காலம்

நோபல் பரிசு

எட்டுத் திக்கும்

நம் குரல்

நம் பிரதமர், நமது பெருமை!

ஒவ்வோர் இந்தியனும் நமது பிரதமரை நினைந்து நினைந்து நெஞ்சில் கழிபேருவகை கொள்ளலாம். ஆம்; உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கிடைக்காத ஓர் அபூர்வ...

உலகம்

ஒரு தேசம், ஒரு ராக்கெட், ஓராயிரம் கவலைகள்

செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர...

நுட்பம்

தரமான இலவசங்கள்

இன்று இணையத்தில் கிடைக்காதது என்று எதுவுமேயில்லை. ஆனால் இலவசம் என்கிற பெயரில் குப்பைகள்தான் அதிகம். மேலே படிந்துள்ளப் புழுதியை நீக்கிவிட்டுப் பார்க்க...

உலகம்

இஸ்ரேல்: என்றென்றும் கலவரமே!

வெளிநாட்டவர் ஒருவருக்கு நமது சாதியக் கட்டமைப்பைப் புரியவைப்பது எந்தளவுக்குச் சிரமமானதோ அதைவிடச் சிரமமானது இஸ்ரேலில் இருக்கும் கட்சிகளையும்...

புத்தகக் காட்சி

வாசிக்கும் சமூகம் ஏன் யோசிப்பதில்லை?

கொழும்பு சிங்களப் புத்தகக் காட்சி குறித்த நேரடி ரிப்போர்ட். தமிழ் வாசகர்களுக்குச் சில புதிய திறப்புகளைத் தருகிற கட்டுரை. “மாக்சிம் கார்க்கியின்...

உலகம் கோவிட் 19

கோவிட்: வயது 3

நாமனைவரும் மறந்தேவிட்ட கோவிட் இன்னமும்கூடச் சில இடங்களில் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. ஆமாம் – மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர்...

உலகம்

ஆயிரம் காதலிகளைக் கொண்ட எழுத்தாளருக்கு உலகின் மிக நீண்ட கால தண்டனை

துருக்கியில் உள்ள ஒரு நீதிமன்றம், அட்னான் ஒக்டர் என்ற எழுத்தாளருக்கு (இவர் ஒரு தொலைகாட்சி பிரபலமும்கூட.) 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது...

பயணம்

மொழி, மீன் மற்றும் ரம்: போர்ட்டோ ரிக்கோ பயண அனுபவங்கள்

சமீபத்தில், ஓர் ஆராய்ச்சி மாநாட்டுக்கு மாணவர்களுடன் போர்ட்டோ ரிக்கோ தீவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. இது எனக்கு ஒரு அரிய வாய்ப்பு. ஏனெனில்...

 • தொடரும்

  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை – 26

  26. அமிர்தசரஸ் சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் நகரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டுக்குத் தலைமை தாங்க மோதிலால் நேரு வந்த அதே சமயத்தில், அங்கே நடக்கவிருந்த முஸ்லிம் லீக் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க அஜ்மல்கான் வந்திருந்தார். மோதிலால் நேருவும், அஜ்மல்கானும் ஒன்றாகப் பொற்கோவிலுக்குச் சென்று...

  Read More
  தொடரும் நாவல்

  ஆபீஸ் – 26

  26 விதி ஹலோ என்ன வெள்ளைப் பேப்பரை எல்லாம் கடிதம் என்று அனுப்ப ஆரம்பித்துவிட்டீர்கள் என்று, அனுப்புநர் முகவரியில் அவன் அடித்திருந்த முத்திரையைப் பார்த்துவிட்டு,  ஏசி பிரஸாதின் நேரடி லைனிற்கு வந்திருக்கிறார் சாஸ்திரி பவனில் இருக்கிற அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி.  வெள்ளைத் தாள் வந்ததை அவர்...

  Read More
  error: Content is protected !!