Home » Home 12-04-23

வணக்கம்

அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மதவாதிகள், மடாதிபதிகள், பாதிரியார்கள், கல்வியாளர்கள் என்று எல்லா தரப்பினர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சமீப காலமாகப் பெருகி வருகின்றன. இப்பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது கலாக்ஷேத்ரா. அங்கு பணிபுரியும் சில ஆசிரியர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் தேசம் முழுதும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. ஏனெனில், பல்லாண்டுக் காலமாக அவ்வமைப்பின் மீது போர்த்தப்பட்டிருந்த புனிதப் போர்வையின் கனம் அத்தகையது. பொறியியல் படிப்புக்கு ஐஐடி எப்படியோ, நாட்டியல் கல்விக்கு கலாக்ஷேத்ரா அப்படி. உலகெங்கிலும் இருந்து மாணவர்கள் அங்கே வந்து பயில்வது காலம் காலமாக உள்ள வழக்கம்.

ஐஐடி வளாகத்துக்குள் நிகழும் குற்றங்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கும் சூழலில் கலாக்ஷேத்ராவும் தனது புனிதப் புண்ணாக்கு மூட்டைகளை இறக்கி வைக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. நிறுவனம் என்பதென்ன? சில தனி நபர்களால் ஆனதுதானே? குற்றவாளிகள் எங்கும் இருப்பார்கள். எத்துறையிலும் இருப்பார்கள்.

இந்த இதழில் இடம் பெற்றுள்ள கோகிலாவின் ‘கலாக்ஷேத்ரா: என்ன நடக்கிறது?’ என்கிற கட்டுரை எச்சார்பும் இன்றி உண்மைகளை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகிறது. மீ-டூ என்பது வெறும் குற்றச்சாட்டுகளின் தொகுப்பாகத் தேங்கிவிடாமல் அவற்றின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசரமும் அவசியமும் அரசுக்கு இருக்கிறது. ஒரு கொலை அல்லது கொள்ளைச் சம்பவத்தை சாட்சிகளின் மூலமாகவும் ஆதாரங்களின் மூலமாகவும் நிரூபிக்க முடியும். பாலியல் அத்துமீறல்கள், சீண்டல்கள், சுரண்டல்கள் அத்தகையவை அல்ல. சாட்சியோ ஆதாரங்களோ இல்லாத காரணத்தினாலேயே இக்குற்றங்களில் ஈடுபடுவோர் தண்டனையில் இருந்து தப்பிப்பது நடைமுறை ஆகிவிடக் கூடாது. அப்படித்தான் அது ஆகும் என்றால், குற்றங்கள் மேலும் பெருகவே செய்யும்.

மீ-டூ குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் தண்டனைப் பரிந்துரைகள் தரவும் தனியொரு அமைப்பையே உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. அரசு ஆவன செய்ய வேண்டும்.

சர்வதேச அளவில் கடந்த வாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கிய பலஸ்தீன் அல் அக்ஸா தாக்குதல் சம்பவம் குறித்து ரும்மான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆண்டுதோறும் ரமளான் சமயத்தில் அப்பள்ளி வாசல் வளாகத்தில் இஸ்ரேலியப் படைகள் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தாக்குதல் நடத்துவதன் ஒரே நோக்கம், இஸ்லாமியர்களைச் சீண்டி, போருக்கு இழுப்பது மட்டும்தான். அல் அக்ஸாவில் ஒரு சிறிய தாக்குதலை மேற்கொண்டால் அங்கே காஸாவில் ஹமாஸ் பதில் தாக்குதலை ஆரம்பிக்கும். அதைச் சுட்டிக்காட்டி பலஸ்தீன் முஸ்லிம்களின் மீது முழுநீளத் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆண்டுதோறும் அங்கே நடப்பது.

இவ்விவகாரத்தின் ஆழம் தொட்டுப் பேசுகிற இக்கட்டுரை, அல் அக்ஸாவின் வரலாற்று முக்கியத்துவத்தையும் விரிவாக விளக்குகிறது.

ஸ்காட்லந்தின் புதிய முதலமைச்சராகியிருக்கும் பாகிஸ்தானி வம்சாவழியைச் சேர்ந்த ஹம்சா யூசஃப் குறித்து ஜெயரூபலிங்கம் எழுதியிருக்கும் கட்டுரை, ரஷ்யா-சீனா-சவூதி அரேபியா மூன்று நாடுகளும் கூட்டணி வைத்து அமெரிக்க டாலரைப் பின்னுக்குத் தள்ள மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, நேட்டோவில் பின்லாந்து இணைந்திருப்பதன் அரசியல் முக்கியத்துவத்தைச் சுட்டும் வினுலாவின் கட்டுரை, என்.சி.ஈ.ஆர்.டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சில அபாயகரமான திருத்தங்களைச் சுட்டிக்காட்டும் பாண்டியராஜனின் கட்டுரை என்று இந்த இதழில் கனம் கூடிய படைப்புகள் அதிகம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

  • உலகம் யாவையும்

    உலகம்

    ‘சரி. பிரிந்துவிடுவோம்!’

    கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...

    உலகம்

    அப்பன் வீட்டுச் சொத்து: பரவும் பங்களாதேஷ் மாணவர் புரட்சி

    இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...

    உலகம்

    யார் இங்கு மான்ஸ்டர்?

    தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...

    உலகம்

    அமெரிக்கத் தேர்தல்: துணைவர் ஜாதகம்

    அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...

    நம்மைச் சுற்றி

    நம் குரல்

    ஆதரித்தால் அள்ளிக் கொடு!

    இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...

    கணினி

    ரீஸ்டார்ட்: உலகை உலுக்கிய ஒரு நாள் கூத்து

    ரீஸ்டார்ட் – டிஜிட்டல் உலகின் சர்வரோக நிவாரணி. கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால், “ஒரு தடவ ரீஸ்டார்ட் செஞ்சு பாருங்களேன்…” என்பதுதான்...

    நம் குரல்

    மின்சாரக் (கொடுங்) கனவு

    தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு ஒருமுறை மொத்தமாக ஏற்றாமல் ஒவ்வொரு வருடமும் கட்டண மாறுபாடுகளைச் செய்கிறது...

    நம் குரல்

    உறங்குகிறதா உளவுத்துறை?

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடைகள் அடைக்கப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் அடக்கம்...

    நம் குரல்

    அவசியங்களைப் புறந்தள்ளாதீர்!

    தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக ஆள் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வாரம் தமிழகத்தில் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு...

    aim தொடரும்

    AIM IT -12

    எங்கெங்கு காணினும் சக்தியடா செயற்கை நுண்ணறிவு ஒன்றும் புதிதல்ல. அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஏ.ஐ துறை சார்ந்த ஆய்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. ஆனால் கடந்த...

    நம் குரல்

    சூழலில் வேண்டாமே ஊழல்!

    கிரேட் நிகோபோர் தீவில் 72000 கோடியில் திட்டப்பணிகளைத் தொடங்க உள்ளது ஒன்றிய அரசு. கடல்வழிப் பாதை போட்டியில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 15

    அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 15

    முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை -15

    15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 15

    15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -114

    114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...

    Read More
    error: Content is protected !!