Home » Home 10-01-2023

வணக்கம்

இன்று (புதன் கிழமை - ஜனவரி 11) மாலை ஐந்து மணிக்கு சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா - 13 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்கள் அனைவரையும் இவ்விழாவுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

இது நம் குடும்ப விழா. ஓராண்டுக் காலம் எழுத்துப் பயிற்சி. ஏழு மாத கால பத்திரிகைப் பயிற்சி. அதன் பிறகு ஒரு புத்தகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது எழுத்தாளர்கள் உண்டார்களா, உறங்கினார்களா, குடும்பத்தைக் கவனித்தார்களா, வேலைக்குச் சென்றார்களா என்றுகூடத் தெரியாது. இரவு பகலாக எழுதிக்கொண்டேதான் இருந்தார்கள். அது பலனளிக்கும் இத்தருணத்தில் உங்கள் வருகையும் வாழ்த்தும் அவர்களுக்குப் பேருவகை அளிக்கும்.

தமிழில் கதை எழுத, கவிதை எழுத ஆயிரம் பல்லாயிரம் பேர் உண்டு. தினமும் நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பிறந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட இயல் சார்ந்து ஆய்வு செய்து, நுணுக்கமான விவரங்கள் சேகரித்து, ஆதாரபூர்வமானதொரு அபுனைவு நூலை எழுத வருவோர் மிகவும் குறைவு. இதுதான் சமரசமே இல்லாத மக்கள் எழுத்து. மக்களுக்கு உதவும் எழுத்து. ஆனால் சிரமமானது. நீடித்த கவனமும் அர்ப்பணிப்பும் தீவிரமும் கோருகிற ஒரு துறை இது.

நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் பிரபு பாலாவின் ‘ஐஐடி கனவுகளும்’, ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குலமு’ம் பேய் வேகத்தில் விற்பதாகப் பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் சொன்னார்.

இதன் அர்த்தம் புரிகிறதா? மாணவர்கள் தம் மேற்படிப்புக்கு வழி காட்டும் ஒரு சரியான நூலைத் தமிழில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். உதவி இயக்குநர்கள் அடுத்தக் கட்டத்தை எட்டிப் பிடிக்க தொண்டர் குலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம்.

மெட்ராஸ் பேப்பர் வெளியீடாக வந்திருக்கும் பதிமூன்று நூல்களுமே இந்த ஆண்டை ஆளப்போகின்றன என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. இம்மகிழ்ச்சியை நீங்களல்லாமல் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து கொண்டாட முடியும்? அதனால்தான் சொல்கிறோம். அவசியம் விழாவுக்கு வருக.

தவிர, இது மேடையில் இருப்போர் மட்டும் பேசுகிற விழா அல்ல. வாசகர் திருவிழா. மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் உள்பட குழுவினர் அனைவருடனும் நீங்கள் விவாதிக்கலாம். கேள்விகள் கேட்கலாம். இதழ் குறித்த உங்கள் கருத்துகளை, விமரிசனங்களை முன்வைக்கலாம். புத்தகங்கள் குறித்துப் பேசலாம். உங்களைச் சந்திப்பதற்காகவே நமது எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் உலகெங்கிலும் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இன்றைய விழாவிலும் நாளை (வியாழன்) முழுதும் சென்னை புத்தகக் காட்சியிலும் உங்களுடன் உரையாடுவதற்காகவே காத்திருப்பார்கள்.

O

இந்த இதழில் சி. சரவண கார்த்திகேயன், ஆத்மார்த்தி, நர்மி, ஷாராஜ், சித்ரன் ரகுநாத் ஆகியோர் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். தமிழர் திருநாளை ஒட்டி இது உங்களுக்கு ஓர் எதிர்பாரா நல்விருந்தாக இருக்கும் என்று நம்புகிறோம்.

பொங்கல் பண்டிகை என்று நாம் கொண்டாடும் இத்திருநாள் உலகெங்கும் பல்வேறு விதங்களில், வடிவங்களில் கொண்டாடப்படுவதுதான். தைத்திருநாளின் சரித்திரத்தை சுவைபட விவரிக்கும் கோகிலா பாபுவின் கட்டுரை உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.

இது மகர ஜோதி மாதமும் கூட. நமது செய்தியாளர் அ. பாண்டியராஜன் தமது சபரிமலை யாத்திரை அனுபவங்களின் அடிப்படையில் எழுதியுள்ள கட்டுரை, பக்திப் பரவச உணர்வை முற்றிலும் வேறொரு ருசியில் மறு அறிமுகப்படுத்துகிறது.

வாசக நண்பர்களுக்கு மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள். இன்று (ஜனவரி 11) மாலை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ள நமது வாசகர் திருவிழாவில் சந்திப்போம்.

  • பொங்கல் சிறப்புச் சிறுகதைகள்

    நகைச்சுவை

    பலே வெந்தயத்தேவா!

    “ஹலோ…” “சார், அது விக்னேஷ் க்ளினிக்குங்களா..?” “ஆமாங்க…” “டாக்டர் விக்னேஷோட பேசணுங்க..” “எக்ஸாக்ட்லி நான்தான் பேசறேன்.” “நீங்க...

    ருசிகரம்

    நம் குரல்

    எங்கே போகிறோம்?

    உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக...

    உலகம்

    ஊரெல்லாம் தண்ணீர், திசையெல்லாம் சேதம்

    செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக்...

    உலகம்

    ஓட்டும் உரிமையுடன் ஓட்டுரிமை

    அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவுடன் அனைவரும் உடனே செய்யும் முதல் வேலை, கார் ஓட்டுநருக்கான முழுச் சலுகைகளுடன் கூடிய உரிமத்தைப் பெறுவதே. அப்போதே...

    உலகம்

    ஒரு துப்பாக்கி எடுத்தவன் கதை

    இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும்...

    உலகம்

    பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி

    தேசியகீதம் முழங்க, ரஷ்யாவின் மூவர்ணக்கொடி கம்பத்தில் தவழ்ந்தேறியது. வலதுகைச் சட்டையில் ஜீ முத்திரையோடு வரிசையில் சிறுவர் சிறுமியர். தேசியக்கொடிக்கு...

  • தொடரும்

    விண்வெளி

    வான் – 1

    அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 68

    68 ஈட்டி இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று ஆயிரம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டு ஓடிய ரங்கன் துரைராஜ் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் வருத்தத்தைவிட கோபம்தான் பொங்கி...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் – 43

    43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு  குடும்பக்  கதை – 69

    69. மீண்டும் காங்கிரஸ் தலைமை கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில்  சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார். அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன்...

    Read More
    error: Content is protected !!