Home » Home 09-11-22

வணக்கம்

வீட்டுக்கடன், வாகனக் கடன், சொந்தக் கடன், கல்விக் கடன் என்பதெல்லாம் இன்று சாதாரண மனிதர்களின் அன்றாடங்களுள் ஒன்றாகிவிட்டன. கிடைக்கிறதே; பயன்படுத்திக்கொள்வோம் என்பது ஒன்று. தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது ஒன்று. ஆனால் பெரும் பணக்காரர்களைப் போல ஏய்ப்பதற்கென்றே வங்கிக்கடன் கோரும் வசதி இன்னும் சாதாரண மனிதர்களுக்கு வரவில்லை; அதற்கு வாய்ப்பும் இல்லை.

இந்த இதழில் வங்கிக் கடன்கள் சார்ந்த பல முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அனைத்தும், கடன் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை. மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் பெறக்கூடிய லாபங்கள் பற்றி ஓரளவு நமக்குத் தெரியும். அதன் அனைத்து வாய்ப்புகளையும் விவரிக்கும் பாபுராஜின் கட்டுரை முதல், கடன் தரும் நிறுவனங்களை எப்படி / எதனைக் கொண்டு தேர்ந்தெடுப்பது என்று விளக்கும் பாண்டியராஜனின் கட்டுரை வரை ஒவ்வொன்றும் பொருட்படுத்தி கவனமுடன் வாசிக்க வேண்டியவை.

விடுதலைப் புலிகள் இருந்தவரை ஈழத் தமிழர்களைக் குறித்து இங்கே பேசிக்கொண்டாவது இருந்தார்கள். இன்று அத்தேசமே பொருளாதாரச் சீர்கேட்டுப் படுகுழியில் விழுந்து கிடக்கும் சூழலில் தமிழர்களின் இன்றைய நிலைமை குறித்துத் தெரிய வருவதே அரிதாகியுள்ளது. இலங்கையில் இன்றைக்கு உள்ள தமிழர் இயக்கங்கள், கட்சிகள், கூட்டமைப்புகள் என்னதான் செய்கின்றன? விளக்குகிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

பிரபல அமெரிக்கக் கல்வியாளர் பெஞ்சமின் புளூமின் கருத்தாக்கங்களை முன்வைத்து, நமது கல்வி அமைப்பின் மீது வலுவான வினாக்களை எழுப்பும் அனந்தசாய்ராமின் ‘சரியாகத்தான் படிக்கிறோமா?’ - இன்றைய ஆசிரியப் பெருமக்கள் பொருட்படுத்தி வாசிக்க வேண்டியதொரு கட்டுரை.

ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சி குறித்த நஸீமாவின் கட்டுரை, நெட்ஃப்ளிக்ஸின் வெற்றிக் கதை, வங்கி இயல் வளர்ந்த வரலாற்றை விவரிக்கும் அறிவனின் கட்டுரை, அரோமா பொன்னுசாமியின் நிறுவனம் பால்பொருள் உற்பத்தித் துறையில் ஆவினுக்கு அடுத்த இடத்தைப் பெற்றதன் சூட்சுமத்தை விவரிக்கும் ராஜ்ஶ்ரீ செல்வராஜின் கட்டுரை என இந்த இதழில் உங்கள் ரசனைக்கு விருந்தளிக்கும் பலதரப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இன்னொரு முக்கியமான விஷயம். மெட்ராஸ் பேப்பரின் முதல் இதழிலிருந்து தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் சில பகுதிகள் இந்த இதழுடன் நிறைவடைகின்றன. செந்தூரம் ஜெகதீஷின் ‘என் கனவை விட்டுச் செல்கிறேன்’, ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குலம்’, சுவாமி ஓம்காரின் ‘சித்’, முருகு தமிழ் அறிவனின் ‘வரலாறு முக்கியம்’, ராஜ்ஶ்ரீ செல்வராஜின் ‘வென்ற கதை’ - இவற்றுக்கெல்லாம் நீங்கள் அளித்த வரவேற்பு என்றும் மறக்க முடியாதது. இந்த இதழில் நிறைவடையும் தொடர்கள் மிக விரைவில் புத்தகங்களாகவும் வெளிவரவிருக்கின்றன. அது குறித்த தகவல்கள் விரைவில் வரும்.

அடுத்த தொடர்கள்?

அந்த அறிவிப்பு அடுத்த வாரம்.

சிறப்புப் பகுதி: கடன்படும் கலை

இங்கும் அங்கும்

நம் குரல்

நம் பிரதமர், நமது பெருமை!

ஒவ்வோர் இந்தியனும் நமது பிரதமரை நினைந்து நினைந்து நெஞ்சில் கழிபேருவகை கொள்ளலாம். ஆம்; உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கிடைக்காத ஓர் அபூர்வ...

உலகம்

ஒரு தேசம், ஒரு ராக்கெட், ஓராயிரம் கவலைகள்

செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர...

உலகம்

இஸ்ரேல்: என்றென்றும் கலவரமே!

வெளிநாட்டவர் ஒருவருக்கு நமது சாதியக் கட்டமைப்பைப் புரியவைப்பது எந்தளவுக்குச் சிரமமானதோ அதைவிடச் சிரமமானது இஸ்ரேலில் இருக்கும் கட்சிகளையும்...

புத்தகக் காட்சி

வாசிக்கும் சமூகம் ஏன் யோசிப்பதில்லை?

கொழும்பு சிங்களப் புத்தகக் காட்சி குறித்த நேரடி ரிப்போர்ட். தமிழ் வாசகர்களுக்குச் சில புதிய திறப்புகளைத் தருகிற கட்டுரை. “மாக்சிம் கார்க்கியின்...

தொழிலோடு உறவாடு

நுட்பம்

தரமான இலவசங்கள்

இன்று இணையத்தில் கிடைக்காதது என்று எதுவுமேயில்லை. ஆனால் இலவசம் என்கிற பெயரில் குப்பைகள்தான் அதிகம். மேலே படிந்துள்ளப் புழுதியை நீக்கிவிட்டுப் பார்க்க...

 • தொடரும்

  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை – 26

  26. அமிர்தசரஸ் சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் நகரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டுக்குத் தலைமை தாங்க மோதிலால் நேரு வந்த அதே சமயத்தில், அங்கே நடக்கவிருந்த முஸ்லிம் லீக் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க அஜ்மல்கான் வந்திருந்தார். மோதிலால் நேருவும், அஜ்மல்கானும் ஒன்றாகப் பொற்கோவிலுக்குச் சென்று...

  Read More
  தொடரும் நாவல்

  ஆபீஸ் – 26

  26 விதி ஹலோ என்ன வெள்ளைப் பேப்பரை எல்லாம் கடிதம் என்று அனுப்ப ஆரம்பித்துவிட்டீர்கள் என்று, அனுப்புநர் முகவரியில் அவன் அடித்திருந்த முத்திரையைப் பார்த்துவிட்டு,  ஏசி பிரஸாதின் நேரடி லைனிற்கு வந்திருக்கிறார் சாஸ்திரி பவனில் இருக்கிற அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி.  வெள்ளைத் தாள் வந்ததை அவர்...

  Read More
  error: Content is protected !!