Home » Home 01-02-23

வணக்கம்

மெட்ராஸ் பேப்பரை ஏன் அச்சிதழாகக் கொண்டு வரக் கூடாது?

இந்தக் கேள்வியை அநேகமாக வாரம் ஒருவராவது கேட்கிறார். தமிழில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் அச்சிதழ்களே தமது அந்திமத்தைக் காணத் தொடங்கியிருக்கும் நிலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட இணைய இதழ் ஒன்றினை அச்சில் கொண்டுவருவது என்பது பல நடைமுறைச் சிக்கல்களை உள்ளடக்கியது. அதில் முதலும் பெரிதுமானது, பொருளாதாரம். மாத இதழ், காலாண்டிதழ் என்றால்கூடச் சிறிது தப்பிக்க முடியும். இணைய வார இதழை அச்சில் கொண்டு வருவது என்பது எளிதல்ல.

இணைய இதழாகவேகூட இது நீடித்திருக்க சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெருகவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இது கதைகளாலும் கவிதைகளாலும் சினிமா செய்திகளாலும் நிறைந்த பத்திரிகை அல்ல. அற்பக் கேளிக்கை அம்சங்களை முற்றிலுமாக விலக்கி வைத்துவிட்டு உலக அளவில் நிகழும் முக்கியமான சம்பவங்கள் அனைத்தைக் குறித்தும் நாம் எழுதுகிறோம். அரசியல், அறிவியல், பொருளாதாரம், நிதி, வர்த்தகம், சமூகம், கலை, இலக்கியம் என ஒவ்வொரு துறை சார்ந்தும் கனமிகு கட்டுரைகளை ஆகச் சுலபமாக வாசிக்கத்தக்க மொழியில் தருகிறோம்.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகப் பெரும்பான்மை சமூகம் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு புதிய, தரம்மிக்க வாசகர் சமூகத்தையே உருவாக்கும் பணியில் மெட்ராஸ் பேப்பர் ஈடுபட்டிருக்கிறது. இப்பெரும் பணியில் எங்களோடு தோள்சேரத்தான் உங்களை வேண்டுகிறோம்.

மெட்ராஸ் பேப்பரைத் தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு இது பிடித்திருக்குமானால் உங்கள் நண்பர்களுக்கு நமது இதழைப் பரிந்துரை செய்யுங்கள். உறவினர்கள், நண்பர்கள், அன்பர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் வருமானால் ஒரு மெட்ராஸ் பேப்பர் சந்தாவை நீங்கள் அவர்களுக்குப் பரிசாகத் தரலாம். நாநூறு ரூபாய் ஆண்டுச் சந்தா என்பது பெரிய தொகையல்ல. நல்ல உணவகம் சென்று ஒருவேளை உண்டால்கூட இதனைக் காட்டிலும் அதிகம் செலவாகும் என்பதை அறிவீர்கள்.

உங்களிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை இதுதான். மெட்ராஸ் பேப்பர் அடுத்தடுத்த உயரங்களை எட்ட உங்கள் ஒத்துழைப்பு ஒன்றுதான் மூலக் காரணியாக இருக்க முடியும். இதன் ஒவ்வொரு வாசகரும் ஒரு புதிய சந்தாதாரரையேனும் கொண்டு வருவது ஒன்றே இந்த இதழ் தழைக்க வழி.

செய்வீர்கள் அல்லவா?

 • உற்றுப் பார்

  உலகம்

  மீண்டும் மதவாதம்: இனி மீளுமா இலங்கை?

  கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...

  உலகம்

  திருப்பி அடிக்கும் வழி

  கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...

  உலகம்

  மக்களே, கடன் கொடுங்கள்!

  ‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...

  நம்மைச் சுற்றி

  நம் குரல்

  செங்கோல் அரசியல்

  ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...

  விளையாட்டு

  ஹமிதா பானு: வெல்ல முடியாத வீராங்கனை

  ஹமிதா பானு என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மல்யுத்த வீராங்கனை என்று சொன்னாலாவது நினைவுக்கு வருகிறாரா? அநேகமாக இராது. இந்த தேசம்...

  ரசனை

  நகைச்சுவை

  மேனேஜரைக் காதலிக்காதே!

  உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...

  நகைச்சுவை

  நான் யார்? நான் யார்? நீ யார்?

  முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப்...

  நுட்பம்

  ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

  உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...

 • தொடரும்

  இலக்கியம் நாவல்

  ஆபீஸ் – 52

  52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...

  Read More
  கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

  கடவுளுக்குப் பிடித்த தொழில் – 27

  மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை – 53

  53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

  Read More
  தல புராணம் தொடரும்

  ‘தல’ புராணம் – 27

  தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...

  Read More
  உயிருக்கு நேர் தொடரும்

  உயிருக்கு நேர் -27

  27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...

  Read More
  error: Content is protected !!