Home » Home-29-06-22

வணக்கம்

இந்த இதழின் சிறப்புப் பகுதியாக, கணினி பராமரிப்பு சார்ந்து ஐந்து கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. யாரிடம் கணினி இல்லை; யாருக்குத்தான் இதெல்லாம் தெரியாது என்று தோன்றலாம். ஆனால் இதில் எழுதியிருக்கும் ஐவரில் நான்கு பேர் துறைசார் நிபுணர்கள்.

தி.ந.ச. வெங்கடரங்கன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர். பிரபு பாலா, தரவு நிர்வாகத் துறையில் (Data Management) பணிபுரிபவர். செல்வின், நோவா சிஸ்டம்ஸ் என்னும் கணினி பராமரிப்பு நிறுவனம் நடத்துபவர். செல்வ முரளி பல்வேறு இணையத்தளங்களை நிர்வகிக்கும் விஷுவல் மீடியா டெக்கின் நிறுவனர்.

இவர்கள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளும் சரி; தருகிற தீர்வுகளும் சரி. நாம் கண்டும் காணாமலும் கடந்து சென்றவற்றின் முக்கியத்துவத்தை அழுத்தந்திருத்தமாகப் பேசுவதை இந்தக் கட்டுரைகளை மொத்தமாகப் படிக்கும்போது உணர்வீர்கள்.

இவை தவிர, இந்த இதழில் வெளியாகியிருக்கும் ‘புற்றுக்கு முற்றும்?’ மிகவும் முக்கியமானதொரு கட்டுரை. புற்று நோயை முற்றிலும் குணப்படுத்திவிடும் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று நாம் இங்கே செய்தியாகப் பார்த்தோம். அம்மருந்து உண்மையிலேயே அனைத்து விதமான புற்று நோய்களையும் குணப்படுத்திவிடுகிறதா? எத்தனைப் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது? சொற்ப எண்ணிக்கை நபர்களிடம் மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வின் முடிவினை மனித குலம் மொத்தத்துக்குமான பிரச்னையின் தீர்வாகக் கொள்ள முடியுமா - இம்மாதிரி அடுக்கடுக்கான வினாக்களை முன்வைத்து, அறிவியல்பூர்வமாக விடை தேடும் மிக முக்கியமான கட்டுரை இது.

மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழுக்கும் நீங்கள் அளித்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது. வெறும் பொழுதுபோக்கை அடிப்படையாகக் கொண்ட வெகுஜன இதழியல் துறையில் ஒரு மாறுபட்ட, நேர்த்தி குன்றாத, வாசகருக்குப் பயன் தரக்கூடிய முயற்சியாக இது அமைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் திட்டமிடுகிறோம். உங்கள் நண்பர்களுக்கு மெட்ராஸ் பேப்பரைக் குறித்து எடுத்துச் சொல்லி, அவர்களைச் சந்தாதாரர் ஆக்குங்கள்.

வாசிப்பு என்பது பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல என்று நம்பக்கூடிய ஒவ்வொருவருக்குமான பத்திரிகையாகவே இது என்றும் இருக்கும்.

சிறப்புப் பகுதி: கணினி பராமரிப்பு

நம்மைச் சுற்றி

வரலாறு முக்கியம்: மென்பொருள்

 • தொடரும்

  இலக்கியம் நாவல்

  ஆபீஸ் – 96

  96 சாமானியன் பட்டையான கறுப்பு ஃபிரேம் போட்ட சோடாபுட்டி கண்ணாடியுடன் குண்டாகக் குள்ளமாய் சின்ன கறுப்பு மூட்டை போல இருப்பார் சுந்தா. கூர்கியான குஷாலப்பாவும் கறுப்புதான். ஆனால் கிரிக்கெட் வீரர் என்பதால் நன்கு உயரமும் அகன்ற மார்பும் திடமான தோள்களுமாய் முதல் பார்வைக்கே ‘அட யாரிது’ என்று...

  Read More
  error: Content is protected !!