Home » அபாயம் மிக அருகில்
உணவு

அபாயம் மிக அருகில்

அழிவின் விளிம்பில் வாழைப் பயிர்

ஒரு காலத்தில் வாழைப் பழங்களுக்கு உள்ளேயும் விதை இருந்தது. ஆனால் இன்று கிடைக்கும் பழங்களில் கிடையாது. விதைகள் மறைந்து போனது போல வாழைப் பழமும் இல்லாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இது அபாயத்தின் மிக நெருக்கமான அறிகுறி. இதன் அடுத்தக் கட்டம், வாழைக்கு நேரும் கதி வரிசையாகப் பிற அனைத்துப் பயிரினங்களுக்கும் ஏற்படலாம் என்பதுதான்.

உலக மக்கள் அதிகம் உட்கொள்வது, வாழைப்பழம். ‘காவண்டிஷ்’ என்ற வகைக்குள் வருவது இது. இதனை பனாமா-4 என்ற பூஞ்சைக் கிருமி தாக்கியுள்ளது. இக்கிருமி இன்னும் சில வருடங்களில் தீவிரமாகி இந்தப் பழ வகையை முற்றிலுமாகவே அழித்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் வாழை ஆய்வு செய்து வரும் வேளாண் விஞ்ஞானிகள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகமாகப் பயிரிடப்பட்டது ‘விதையில்லாத கிராஸ் மிசெல்’ (Gros Michel) இரகம். அதற்கு முன்பு வாழைப் பழங்களில் விதை இருந்தது. அப்போது உலகம் முழுவதும் இந்தப் பழத்தையே மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதை ‘பனாமா-1’ என்ற பூஞ்சைத் தொற்று தாக்க, அது முற்றிலுமே அழிந்து போய் விட்டது. அந்தச் சமயம் ‘காவண்டிஷ்’ இரகம் கைகொடுத்தது. விளைவு, வாழை விவசாயத்தையும், அதன் உணவையும் நம்பியிருந்த பல கோடி மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டது.

‘ஆனால் அந்த சம்பவத்திலிருந்து பாடம் எதுவும் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் அதே தவறை செய்கிறோம். அதனால் வாழை மட்டுமல்ல, இதர உணவு தானிய உற்பத்திக்கும் பேராபத்து உள்ளது’ என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதைப் புரிந்து கொள்ள நாம் முதலில் நம் உணவுச் சூழல் கட்டமைப்பை (Food System) அறிந்து கொள்ள வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!