பெண் என்கிறவள் ஆணுக்குச் சமமான உயிர்த்திரள்; வெறும் நுகர்வுப் பண்டம் அல்ல. அவள் திறமையை அங்கீகரித்து, வாய்ப்புகளை உறுதி செய்து, ஆளுமையை மதிக்கும் அதே சமயம் அவளது அழகினைக் கொண்டாடவும் தவறக்கூடாது. அழகு ஒருத்தியிடம் அதீதமாகக் கொட்டிக் கிடக்கையில் அது ஆராதனைக்கு உரியது. குறிப்பாக நடிகைகள், மாடலிங் செய்வோர் தம் அழகு ரசிக்கப்படவும், பரப்பப்படவுமே மிக விரும்புகிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் திறமை என முன்வைப்பது பெரும்பாலும் அழகைத்தான்.
இதைப் படித்தீர்களா?
66. சொல்லாதது பூர்ணிமை கடந்து சில தினங்கள்தாம் ஆகியிருந்தன என்றாலும் வானில் வெளிச்சமில்லாமல் இருந்தது. ருத்ர மேருவின் சர்சுதி கடக்கும் அடிவாரமெங்கும்...
66. செயலில் காட்டுங்கள்! நெல்லூரில் நடைபெற்ற மெட்ராஸ் மாகாண அரசியல் மாநாட்டில் பேசிய பல தலைவர்கள், ‘நாம் உள்ளூர்த் தொழில்களை ஆதரிக்கவேண்டும்...
Comment
-
Share This!
கலர்களை B&W ல் போட்ட எடிட்டருக்கு கண்டனங்கள். CSK அட்டகாசம்
சரி, சாதா ரசிகர்கள் இன்னும் பல தந்திரோபாயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் போலும். அது போக, கட்டுரையாசிரியர் அனு ஸிதாராவை நீங்கியது தெளிவாகிறது; ஆனால், இணைந்திருந்தது பற்றிய குறிப்பு இல்லையே…
புத்தகம் வாசிப்பதில் முக்கியமான நலன்களில் ஒன்று, நம் ரசனை மேம்படுதல்.
எப்படி “Priya”மான ஒரு பெண்ணை “Anu” அணுவாக ரசிக்க வேண்டுமென்பதை ரொம்ப “Deepa” ஆராய்ந்து எழுதியிருக்கீங்க. உங்களுக்கு தேவதைகளின் சார்பில் என் “Ash”ஷிர்வாதங்கள்.
இந்த கட்டுரை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகியை ரசிப்பதை தாண்டி முழு நேர பைத்தியமாக திரிவது எப்படி என்ற ஆராய்ச்சி கட்டுரை வியப்பாக உள்ளது. இதை ஒரு பெண் அழகை கொண்டாடுகிறோம் என்று தீவிர பைத்தியமாக சினிமா கதாநாயகனை பின் தொடர்ந்தால் ஆண்கள் சகிப்பார்களா?முக்கியமாக மனைவியோ மகளோ தங்கையோ தன் வீட்டுப்பெண்கள் ஆண்களை ரசித்தலை ஏற்றுக்கொள்வார்களா? குஷ்புவுக்கு கோவில் கட்டியதும் சில்க் கடித்த ஆப்பிளை ஏலத்தில் எடுத்த ஆண்களும் இப்படி தானே உருவாகிறார்கள்.பகிரங்கமாக அழகை ரசித்து கொண்டாடுவதென்பது 1980களுக்கு மேல் உருவான ஒன்று என்று நினைக்கிறேன்.சரியாக தெரியவில்லை.கதைகளில் கதாசிரியர் வர்ணிப்பது என்பது வேறு.நான் அதை சொல்லவில்லை.